என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • தொடர் தோல்வி எதிரொலியால் பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    லாகூர்:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது. இதையடுத்து,

    பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் அக்டோபர் 15 - 19 வரை நடைபெறவுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 - 28 வரை நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய முல்தான் மைதானத்தின் அதே பிட்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    • ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஏ பிரிவில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும் மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அசத்தியுள்ளார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் இத்தாலி வீரரான ஜன்னிக் சின்னரும் மோதினர்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னர் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சின்னர் 7-6 (7/4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

    • ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார்.
    • தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்தாண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தனது கடந்த கால விளையாட்டு அனுபவங்கள் குறித்து தீபா கர்மாகர் பகிர்ந்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தீபா கர்மாகர், "தனது ஆரம்பகால பயிற்சியாளர் ஒருவர் தன்னை எருமை என்று சொல்லி கேலி தொடர்ச்சியாக கேலி செய்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கம் வென்று என்னை கேலி செய்தவர்களுக்கு நான் பதிலடி கொடுத்தேன். என்னை எருமை என்று கிண்டலடித்து பயிற்சியாளர் நான் பதக்கம் வென்ற பிறகு பூங்கொத்துகளுடன் என்னை வரவேற்க்க விமான நிலையம் வந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

    • 2017 முதல் 2022 வரை மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே பணியாற்றியுள்ளார்.
    • கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் பணியாற்றி வந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

    2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே பணியாற்றியுள்ளார். மும்பை அணி 3 சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது

    கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியின் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் பணியாற்றி வந்தார். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தை தான் மும்பை அணி பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான்.
    • தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்கள் பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி, மற்றும் நசீம் ஷா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் அக்டோபர் 15 - 19 வரை நடைபெறவுள்ளது. 3 ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 - 28 வரை நடைபெறவுள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
    • அரையிறுதிக்கு முன்னேற இந்தியா கட்டாய வெற்றி பெற வேண்டும்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகின்றன. இதில், லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

    இந்தத் தொடரில் ஏ பிரிவில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில், இன்றிரவு நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. 

    • இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.
    • ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன்.

    இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் 297 அடிக்க துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.

    கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் 47 பந்துகளில் 111 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கும். இந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன், அணியின் தலைமை தனக்கு ஆதரவளித்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    "நான் நன்றாக ஆடியதால் அணியினர் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அங்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது வெறுப்பாக இருக்கும், ஆனால் என்னால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்."

     


    "அதிக போட்டிகளில் விளையாடும் போது, அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன். சிறப்பாக செய்ய முடியும் என்பதை புரிந்து கொண்டு செய்ய வேண்டிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்."

    "நாட்டிற்காக விளையாடும் போது, அழுத்தம் நிச்சயம் இருக்கும். ஆனால், சிறப்பாக ஆடி நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான செயல்முறையை எளிமையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டேன்."

    "என்ன ஆனாலும் எனக்கு ஆதரவளிப்பதாக தலைமை தெரிவித்தது. அது வெறும் வார்த்தையாக மட்டுமின்றி செயல்களிலும் வெளிப்பட்டது. கடந்த சீரிசில் இரண்டு முறை டக் அவுட் ஆகி, அடுத்து என்ன என்ற கேள்வியுடன் கேரளா சென்றேன், தற்போது நான் இங்கு இருக்கிறேன்," என்று தெரிவித்தார். 

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு உடன் மோதினார். இதில் ஜெங் 6-3, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சபலென்கா, ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

    நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சின்னர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

    ×