என் மலர்
விளையாட்டு
- உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அபிமன்யு 127 ரன்கள் குவித்தார்.
- தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
ரஞ்சி கோப்பை டிராபியில் உத்தர பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக சுதீப் சட்டர்ஜி சதம் விளாசினார். இதனையடுத்து உத்தரபிரதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஆர்யன் ஜூயல் 92 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் 19 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் மட்டும் இழந்து 254 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் உத்தரபிரதேசம் அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அவர் அசத்தி உள்ளார். முதல் தர போட்டியில் இது அவருக்கு 27-வது சதம் ஆகும். இதனால் அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேக்-அப் இடத்திற்கு தகுதியானவராக இருப்பார் என அதிகாரிகள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விலக உள்ளதாக அந்த இடத்தை இவர் நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.
- தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
- அறிமுக போட்டியில் தனது முதல் கோலை நிஷான் வேலுப்பிள்ளை அடித்தார்.
பிபா உலகக்கோப்பை 2026-க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். பிபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை சேர்த்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83-வது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.
அவர் ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 என்ற எண் கொண்ட ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி எண்ணும் 7 என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
- நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 3 அணிகளில் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும் 3-வது ஆட்டத்தில் இலங்கையை 82 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நேற்று நடந்த 4-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது இன்று தெரிந்து விடும்.
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 19-வது 'லீக்' ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளியுடன் இருக்கும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும்.
'பி' பிரிவில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா தலா 6 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளியும், வங்காளதேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்து புள்ளி எதுவும் பெறவில்லை.
நாளை நடைபெறும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
- பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது.
- 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை.
பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது.
அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில வருடங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 2019-க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போதும் விராட் கோலியை இந்தியா கழற்றி விடவில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபர் அசாமை கழற்றி விட்டு பாகிஸ்தான் தவறு செய்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது. 2020 - 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை. அந்த காலகட்டங்களில் அவர் முறையே 19.33, 28.21, 26.50 என்ற சுமாரான சராசரியையே கொண்டிருந்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதன்மை பேட்ஸ்மேனை சொல்லப்போனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த வீரரை ஒதுக்குவது அணியின் மற்ற வீரர்களுக்கு எதிர்மறையான செய்தியைக் கொடுக்கும். பதற்றம் எனும் பொத்தானை அமுக்குவதற்கு நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம்முடைய வீரர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பும் வாய்ப்பும் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
என்று ஃபகர் சமான் கூறினார்.
- இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.
- காயத்தால் அவதிப்படும் கிரீன் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ந்தேதி பெர்த்தில் தொடங்கு கிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.
முதுகுபகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.
கேமரூன் கிரீன் விலகுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் 28 டெஸ்டில் விளையாடி 1377 ரன் எடுத்துள்ளார். 35 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 25 வயதான அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 174 ரன் குவித்து இருந்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது 'ஹாட் ரிக்' தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 4 தொடரிலும் இந்தியா வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜா:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடைசி வரை போராடிய கேப்டன் கவுரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
- ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படுகிறது.
- டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
புதுடெல்லி:
ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதற்கான வீரர்களின் 3 நாள் ஏலம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்திற்கு விலை போனார்.
அவரை சூர்மா ஹாக்கி கிளப் வாங்கியது. மற்ற இந்திய வீரர்கள் அபிஷேக் ரூ.72 லட்சத்திற்கும் (ஷிராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிக்கு), ஹர்திக் சிங் ரூ.70 லட்சத்திற்கும் (உ.பி. ருத்ராஸ்), அமித் ரோகிதாஸ் ரூ.48 லட்சத்திற்கும் (தமிழ்நாடு டிராகன்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டனர். தமிழக வீரர் செல்வம் கார்த்தியை ரூ.24 லட்சத்திற்கு தமிழக அணி சொந்தமாக்கியது.
அயர்லாந்து கோல் கீப்பர் டேவிட் ஹர்டே (ரூ.32 லட்சம், தமிழ்நாடு டிராகன்ஸ்), நெதர்லாந்தின் டுகோ டெல்கென்கம்ப் (ரூ.36 லட்சம், தமிழ்நாடு), ஜெர்மனியின் ஜீன் பால் டேன்பெர்க் (ரூ.27 லட்சம், ஐதராபாத் அணி), நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் (ரூ.25 லட்சம், ஷிராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்) ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போனார்கள்.
- 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.
10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.
இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.
பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.
- முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.
ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.
தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
- ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடந்துவருகிறது.
- இதில் இந்திய ஜோடி ஜப்பான் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
அஸ்தானா:
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி ஜோடி, ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ-மியு கிஹாரா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் ஜோடி 11-4, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது .
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை 179 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங், எவின் லெவிஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.
முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில் லெவிஸ், 28 பந்தில் 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் அரை சதம் கடந்து 63 ரன்னில் வெளியேறினார். ரோஸ்டன் சேஸ் 19 ரன்னும், ரோவ்மேன் பவெல் 13 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை மட்டுமே எடுத்தது.
சார்ஜா:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
ஏ பிரிவில் இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சார்ஜாவில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்னும், மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி தலா 32 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 20 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.
இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, தனி ஆளாகப் போராடினார்.
54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.






