என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhimanyu Easwaran"

    • ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
    • இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    இந்நிலையில் நாளை ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஏலப்பட்டியலில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு ஐ.பி.எல். அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரஞ்சியில் பெங்கால் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார்.
    • 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்றிருந்தார். அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாக சில தகவல்களை அவரது தந்தை கூறியுள்ளார்.

    அதில், அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவருக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை. அவரின் உழைப்பிற்கான பலன் அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என ஒட்டு மொத்த பயிற்சியாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என கவுதம் கம்பீர் என்னிடம் கூறினார்.

    • இந்தியா- இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 போட்டிகளில் மோதுகிறது.
    • இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.

    இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    18 பேர் கொண்ட இந்திய ஏ அணி:-

    அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்)), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், ருதுராஜ், கான்போஜ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே, கலீல் அகமது.

    • உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அபிமன்யு 127 ரன்கள் குவித்தார்.
    • தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

    ரஞ்சி கோப்பை டிராபியில் உத்தர பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக சுதீப் சட்டர்ஜி சதம் விளாசினார். இதனையடுத்து உத்தரபிரதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஆர்யன் ஜூயல் 92 ரன்கள் விளாசினார்.

    இந்நிலையில் 19 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் மட்டும் இழந்து 254 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் உத்தரபிரதேசம் அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அவர் அசத்தி உள்ளார். முதல் தர போட்டியில் இது அவருக்கு 27-வது சதம் ஆகும். இதனால் அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேக்-அப் இடத்திற்கு தகுதியானவராக இருப்பார் என அதிகாரிகள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விலக உள்ளதாக அந்த இடத்தை இவர் நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.

    ×