search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dipa Karmakar"

    • ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
    • தீபா கர்மாகரின் தடை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியாமல் இருந்துவந்தது.

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைதீபா கர்மாகர். திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர், கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4-வது இடம் பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    இந்நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    தீபா கர்மாகரின் இடைக்கால தடை பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு மௌனம் காத்துவந்தது. அதனால் தீபா கர்மாகரின் தடை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியாமல் இருந்துவந்தது.

    இந்த தடை குறித்து தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஷ்வேஷ்வர் நந்தி ஆகியோரும் தெளிவுபடுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், தீபா கர்மாகருக்கு ஊக்கமருந்து விவகாரத்தில் 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி. வரும் ஜூலை 10 வரை இந்த தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் காயம் காரணமாக பாதியில் விலகினார். #DipaKarmakar #GymnasticsWorldCup
    பாகு:

    ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டி அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் தனது சாகசத்தை வெளிக்காட்டி அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவின் தகுதி சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

    இதன் இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தனது முதல் வாய்ப்பில் சரியாக தரையிறங்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் காயம் அதிகரித்தது. எனவே அவர் தனது 2-வது முயற்சியில் ஈடுபடாமலேயே போட்டியில் இருந்து விலகினார்.

    காலில் காயம் அடைந்த மணிப்பூரை சேர்ந்த 25 வயதான தீபா கர்மாகர் அடுத்த வாரம் தோகாவில் நடைபெறும் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தீபா கர்மாகர் இந்த போட்டியின் மூலம் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது காயத்தால் அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

    காயம் அடைந்த தீபா கர்மாகர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சை பெற இருக்கிறார். அத்துடன் மங்கோலியாவில் ஜூன் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் நடக்கும் உலக சாம்பியஷிப் போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் அவர் முனைப்பு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்து அசத்திய தீபா கர்மாகர் அதன் பிறகு காயத்தில் இருந்து மீண்டு வர சுமார் 2 வருடம் பிடித்தது நினைவிருக்கலாம்.

    தீபா கர்மாகர் காயம் குறித்து இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் ரியாஸ் பாத் அளித்த பேட்டியில், ‘இறுதிப்போட்டிக்கு முன்பாக தீபா கர்மாகருக்கு முழங்காலில் சில பிரச்சினை ஏற்பட்டு வலி உருவானது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்கு பிறகு வலியின் தாக்கம் குறைந்தது. அவர் ‘வால்ட்’ முதல் முயற்சியில் சரியாக தரையில் குதிக்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட வலி அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அடுத்த வாய்ப்பை அவர் முயற்சி செய்யாமலேயே போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. இந்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டாலே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ என்று தெரிவித்தார்.  #DipaKarmakar #GymnasticsWorldCup
    கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார். #DipaKarmakar #SachinTendulkar #Olympics
    ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் கிரிக்கெட் சகாப்தம் டெண்டுல்கர் பேசியதாவது:-

    கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைவது அவசியமாகும். இதனால் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி என்று எதாவது ஒரு வகையான கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெற வேண்டும்.



    2016 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற வேண்டும் என்ற நான் அப்போதைய ஒலிம்பிக் தலைவரிடம் பேசி இருந்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #DipaKarmakar #SachinTendulkar #Olympics
    ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகர் உள்பட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா மற்றும் பலெம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மார்கர் பெண்களுக்கான பேலன்ஸ் பீம் பிரிவில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் 12.500 புள்ளிகள் பெற்று அவரால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் ஒட்டுமொத்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தனர்.

    தகுதிச் சுற்றில் தீபா கர்மாகர் 12.750 புள்ளிகள் பெற்றிருந்தார். சீன வீராங்கனை சென் யில் 14.600 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கெரிய வீராங்கனை 13.400 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீராங்கனை 13.325 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் வென்றனர்.



    தீபா கர்மாகர் 1000 சதவிகிதம் உடற்தகுதியுடன் இல்லை. ஒலிம்பிக்கில் 4-வது இடம்பிடித்த வால்ட் பிரிவில் அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அருணா, பிரணதி ஆகியோரும், ஆண்களில் ஆஷிஷ் மற்றும் அணிகள் தோல்வியடைந்தன.
    காயத்திலிருந்து மீண்டு உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், அடுத்து களமிறங்க உள்ள ஆசிய போட்டியில் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. #DipaKarmakar
    இஸ்தான்புல்:

    துருக்கியின் மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்று சிறப்பாக  செயல்பட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், வால்ட்  பிரிவில் 14.150 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும்.

    இதேபோல் பேலன்ஸ் பீம் பிரிவில் தீபா கர்மாகர்,12.1 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்தார். 11 85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தார். இந்த பிரிவில் துருக்கி வீராங்கனை கோக்சு சான்லி 12.55 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

    திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர் (24), கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இதில் தீபா 4-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின்னர், முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து, 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். காயத்திலிருந்து மீண்ட அவர், முதல் முறையாக சர்வதேச அரங்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    இந்த வரலாற்று வெற்றி தந்த உற்சாகத்துடன் ஆசிய போட்டியில், தீபா கர்மாகர் களமிறங்குகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் தீபா கர்மாகருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.



    கடந்த அணடு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லியு ஜின்ரு 14.400 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மேலும், கடந்த மே மாதம் சீன சாம்பியன்ஷிப் போட்டியில் 14.485 புள்ளிகள் பெற்று அசத்தினார். இதேபோல் கடந்த ஆசிய போட்டியில் 14.200-க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்ற தென்கொரிய வீராங்கனைகள் இரண்டு பேர் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
     
    சீனாவின் வாங் யாங்- மாவோ இணையும் தங்கள் பிரிவு போட்டிகளில் 14.300 புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்று எதிராளிகளை கதிகலங்க செய்தவர்கள். லியு ஜின்ரு கடந்த உலகக் கோப்பையில் 14.625 புள்ளிகள் பெற்று அனைவருக்கும் செக் வைத்துள்ளார். மேலும் சில முன்னணி வீராங்கனைகளும் களத்தில் உள்ளனர்.

    இத்தனை போட்டியாளர்களின் சவால்களையும் கடந்து தீபா கர்மாகர் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.  #DipaKarmakar
    துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்க வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #DipaKarmakar #Gymnastics #PMModi
    புதுடெல்லி :

    துருக்கி நாட்டில் உள்ள மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகரால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்த வெற்றி அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளார்.



    தீபா கர்மார்கர் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பைனலில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டு நான்காவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #DipaKarmakar #Gymnastics #PMModi
    ×