என் மலர்
விளையாட்டு
- சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
- 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.
- மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்தததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி "வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு, நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர்" என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
- ஜோகோவிச் இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார்.
- இதன் காரணமாக ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரேவ் போராடி கைப்பற்றினார். பின்னர், 2-வது செட் ஆட்டம் தொடங்கும் முன்னர் ஜோகோவிச் இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் சிறந்த அணிகள் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆண்டுக்கான ஐ.சி.சி.-இன் ஒருநாள் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளில் இருந்து தலா மூன்று பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

ஐ.சி.சி.-இன் 2024 ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் சரித் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அசலங்கா 605 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 50.2 ஆகும். இதில் ஒரு சதம், நான்கு அரைசதங்கள் அடங்கும்.
இலங்கை அணி மட்டும் கடந்த ஆண்டு 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
2024 ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியல்:
சரித் அசலங்கா (கேப்டன்) - இலங்கை
சயிம் ஆயுப் - பாகிஸ்தான்
ரஹ்மனுள்ளா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான்
பதும் நிசங்கா - இலங்கை
குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) - இலங்கை
ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டு - வெஸ்ட் இண்டீஸ்
அசமதுல்லா ஓமர்சாய் - ஆப்கானிஸ்தான்
வனிந்து ஹசரங்கா - இலங்கை
ஷாஹீன் ஷா அப்ரிடி - பாகிஸ்தான்
ஹாரிஸ் ரவுஃப் - பாகிஸ்தான்
ஏ.எம். காசன்ஃபர் - ஆப்கானிஸ்தான்
- முதல் இன்னிங்ஸில் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், அடுத்து மும்பை அணி இன்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் தமோர், ஸ்ரேயஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
- வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல்.
- ரன்பீர் கபூர் நடிக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்களை யாரும் மறக்க முடியாது. இவர் தலைமையின் போது, அணியில் அறிமுகமான பல்வேறு வீரர்கள் கிரிக்கெட் உலகில் அசாத்திய சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை லவ் ரஞ்சனின் லவ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், பிரசென்ஜித் சாட்டர்ஜி ஆகியோர் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
- சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது.
சென்னை:
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ந் தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக் ஷர் படேல் ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசினார்கள். அபிஷேக் சர்மா அதிடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் கடந்த போட்டியை போலவே 3 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விமர்சனம் எழுந்தது. நாளைய போட்டியிலும் அவர் இடம்பெறுவாரா? என்பது உறுதி இல்லை. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ரவி பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.
இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. கேப்டன் பட்லர் ஒருவரே கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். மற்ற வீரர்களின் பேட்டிங் எடுபடவில்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் நேர்த்தியாக வீசக்கூடியவர்.
சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும். அந்த அணி வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டி நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக இங்கு இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கோலாகலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது .
இரு அணிகளும் நாளை மோதுவது 26-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 25 ஆட்டத்தில் இந்தியா 14-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கேர்ஸ், ரெகான் அகமது, சகீப் மகமூத்.
- வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.
சமீபகாலமாக திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது பல வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளார்.
வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வீரேந்திர சேவாக்- ஆர்த்தி தம்பதி தங்களின் 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.
முன்னதாக, வீரேந்திர சேவாக் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்புகைப்படங்களில் அவரது மகன் மற்றும் அவரது தாயார் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. மேலும், பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோவிலின் படங்களையும் சேவாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதிலும் அவரது மனைவி இல்லை. இதனால் இந்த தம்பதிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
விவாகரத்து தொடர்பாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தோல்வி அடைந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-19 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
- இதன் 50வது ஆண்டு விழா மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கொண்டாடப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது.
தவிர FIFTYக்கு 1,902, YEARSக்கு 2,831 OFக்கு 1,066, WANKHEDEக்கு 4,990, STADIUM 3,672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த மைதானத்தில் 2011-ம் ஆண்டில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை (50 ஓவர்) வென்றது குறிப்பிடத்தக்கது.
- ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் எம்.எஸ்.டோனி பிரார்த்தனை செய்தார்.
- எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ராஞ்சி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி அடைந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த லீக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.
இதில் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் செட்டை 21-13 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 24-22, 21-18 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதன்மூலம் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.






