என் மலர்
விளையாட்டு
- இந்தியா- இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:-
யுஸ்வேந்திர சாஹலின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக மன்னிப்பு (காதுகளின் மீது கை வைத்தவாறு மன்னிப்பு கேட்டு சைகை செய்தார்) கேட்டுக் கொள்கிறேன்.
இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு தருணம். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டுக்காக இன்னும் நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து என்றும் நன்றி உள்ளனாக இருப்பேன்.
என அர்ஷ்தீப் சிங் கூறினார்.
- அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் மோதினர்.
- இதில் முதல் செட்டில் இகா ஸ்வியாடெக்கும் 2-வது செட்டை மேடிசனும் வெற்றி பெற்றனர்
கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டில் இகா ஸ்வியாடெக்கும் 2-வது செட்டை மேடிசனும் வெற்றி பெற்றனர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. 10-8 என்ற கணக்கில் மேடிசன் வீழ்த்தினார்.
இதனால் 5-7, 6-1, 10-8 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக இவர் முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் மேடிசன் மோதுகிறார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடக்கவுள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப்போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இன்று மாலை சென்னை வந்தனர். நாளை முதல் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச டிக்கெட் விலை ரூ.15 ஆயிரமாகும். டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. கடைசியாக 2018 நவம்பர் 11-ந்தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. கடைசியாக சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
- சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
- அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும்.
கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.
எட்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.
இதனையடுத்து ரஞ்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். இதனால் அவர்கள் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும். மேலும் பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 36 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் 10 ரன்கள் கூட எடுக்க முடியாத நிலையில் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா- பாலா படோசா ஆகியோர் மோதினார்.
- இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.
இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் இன்று மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் விளையாடுவார்கள்.
- முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியாவை இந்தியா வீழ்த்தி இருந்தது.
- இலங்கைக்கு எதிராக இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி, இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிக பட்சமாக கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 58 ரன்களுக்குள் அடங்கியது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரின் ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
- முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர். தொடர்ந்து 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 3-வது செட்டில் லக்ஷயா சென் 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனால் 2-வது சுற்று ஆட்டத்தில் 16-21, 21-12, 21-23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமர் நாசிர் மிர் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31-வயது உமர் நாசிர் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உமர் நாசிர் பந்துவீச்சில் ரோகித் சர்மா மூன்று ரன்களுக்கும், ரஹானே 12 ரன்களுக்கும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
கடந்த 2013 முதல் விளையாடி வரும் மிர் இதுவரை 57 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிர் 54 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இதுவரை 32 விக்கெட்டுகளை கைப்ற்றியுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரான உமர் நாசிர் மிர் கடந்த 2018-19 தியோதர் கோப்பை தொடரின் போது இந்தியா சி அணிக்காக விளையாடினார். ரஞ்சி கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் உமர் நாசிர் மிர் மற்றும் யுத்விர் சிங் தலா நான்கு விக்கெட்டுகளையும், ஆகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.
- அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.
இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன் தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்று் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
- சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அழிப்பது நியாயமே இல்லை என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவிர்த்து வரும் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சும்பன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
அதே சமயம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி குறித்து அஷ்வின் தனது யூடியூப் சானலில் நேரலையில் பிரபல கிரிக்கெட் வல்லுநர் Pdogg என்று அழைக்கப்படும் பிரசன்ன அகோரம் உடன் உரையாற்றினார்.
அப்போது நேரலையில் ரசிகர் ஒருவர் "Pdogg தன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று அஷ்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த அஷ்வின், "டேய் உன்னுடைய சாம்பியன்ஸ் டிராபி அணியில் சுப்மன் கில்லை எடுக்கவில்லையா? என கேட்க Pdogg இல்லை என்று சைகை காட்டுகிறார். உடனே அஷ்வின் இல்ல எனக்கு புரியல என்று கேட்க, அதற்கு Pdogg ஹானஸ்ட் ராஜ் என்று எப்படி என்னை எல்லாரும் கூப்பிடுவார்கள் நியாயமா இருந்தா தானே கூப்பிடுவாங்க என்று சொல்ல, அதற்கு அஷ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் கில் 58 ஆவரேஜ் வைத்துள்ளான். சும்மா பாப்புலர் கருத்துன்னு உன்னோட அணியில் இருந்து அவனை எடுத்துவிட்டியா?" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள்.
- எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கேரள அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. பயிற்சியில் பங்கேற்காதது தான் இதற்கு காரணம் என்று கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்து இருந்தது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கும், கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் இருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்தநிலையில், என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றுக்கும் சஞ்சு சாம்சன் மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள் என்று அவரது தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சஞ்சுவுக்கு எதிராக அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். அவர் கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் கேரளா கிரிக்கெட் சங்கம் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை."
"அங்குள்ள இயக்குநர்களிடம் பதில் பேச முடியாது, என் மகன் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களை நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
"வேறு எந்த மாநிலமும் என் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், நான் அதை வேண்டுகோளை முன்வைக்க தயாராக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
- ரஞ்சி போட்டியில் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடினார்
- பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.
எட்டு போட்டிகளிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.
இதனையடுத்து ரஞ்சி போட்டியில் மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றைய ரஞ்சி போட்டியில் ஜம்மு-காஷ்மீர் - மும்பை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் ரோகித் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.






