என் மலர்
விளையாட்டு
- கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- தாவூத் இப்ராஹிமின் ‘டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை செய்தன. முன்னதாக இந்த போட்டியை வைத்து ரூ.5 ஆயிரம் கோடிக்கு மாபெரும் சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமானதாக இந்திய அணி உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து இருந்தனர். துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானதாகவும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை துபாய் வரை நீண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
- மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத் அணிக்கு வலு சேர்த்தனர்.
- மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.
இறுதியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. அமன்ஜோத் கவுர் 27 ரன்களிலும், சஜீவன் சஜனா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.
- துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையவில்லை.
- ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது. ஒரு மைதானத்தில் தோல்வியடையாமல் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்திய அணி கூட்டாக முதலிடத்தை எட்டியுள்ளது.
அதன்படி துபாய் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 11 ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாமல், 10 முறை வெற்றி பெற்று, ஒரு முடிவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன் நியூசிலாந்து அணி டுனெடினில் விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் வெற்றியைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்திய அணி அதனை சமன்செய்துள்ளது.
ஒரு மைதானத்தில் தோற்காமல் அதிக வெற்றிகள் பெற்ற விவரங்கள்:-
10 - இந்தியா, துபாய் (11 போட்டிகள், 1 முடிவில்லை)
10 - நியூசிலாந்து, டுனெடின்
7 - இந்தியா, இந்தூர்
7 - பாகிஸ்தான், ஹைதராபாத் (பாகிஸ்தான்)
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இந்த இறுதிப் போட்டியில் மொத்தம் 99 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அதில் 73 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டுமே வீசப்பட்டன. இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.
முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் 65.1 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
- பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.
துபாய்:
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சான்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.
ஐ.சி.சி.-தேர்வு செய்த அணி விவரம்:
ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்டர் (கேப்டன்), முகமது சமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி.
12-வது வீரர்: அக்சர் படேல்
- இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
- இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று மோதினர். இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
இந்நிலையில்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது எங்களது இலக்காக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்கள். கடந்த கால ஐசிசி தொடர்களின் முக்கியமான போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அந்த தொடர்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.
இளம் வீரர்களுடன் விளையாடியது புது அனுபவமாக இருந்தது. அவர்கள் உடன் விளையாடி எனது அனுபவத்தை அதிகரித்து கொள்ள விரும்புகிறேன். இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது இந்திய அணி நல்ல வீரர்கள் கையில் தான் இருக்கிறது என்று தோணுகிறது.
நான்கு ஐசிசி பட்டங்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடி இதைச் சாதித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நான் கருதுகிறேன்
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
- ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
18-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ந் தேதி முடிகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியதாவது:-
இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார்.
- ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த தொடருடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார். அதனையடுத்து அந்த போட்டியுடன் அஸ்வின் ஓய்வு அறிவித்து விடுவார். அதுபோல ஜடேஜாவையும் கட்டியணையத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
- இதில் ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (4-வது சுற்று) தகுதி பெற்றுள்ளார். இவர் 4-வது சுற்றில் ஸ்விடோலினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இதன் மற்றொரு ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவும் சக நாட்டவரான கேட்டெரினா சினியாகோவாவும் மோதினர். இதில் 7-5, 6-1 என்ற கணக்கில் கரோலினா முச்சோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணிக்கு 19.5 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2002-ம் ஆண்டு இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
இந்நிலையில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். கடினமான போராட்டத்திற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றிகள் என கூறியிருந்தார்.
- இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
- என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம் என்று ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம். ஆகவே வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புகிறேன். இதற்கு எனக்கு நேரம் தேவைபடுகிறது. என் நாட்டிற்காக விளையாடுவதுதான் எனக்கு மிக முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.
ஹாரி புரூக்கின் இந்த முடிவால் அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் புதிய விதிப்படி, ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு வீரர் காயத்தை தவிர பிற காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் அடுத்த 2 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிதிக்கபட்டுள்ளது.
ஆகவே தனது பாட்டியின் மரணத்தை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே விலகிய ஹாரி புரூக்கிற்கு 2027 ஐபிஎல் தொடர் வரை விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.






