என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 52 ரன்களிலும் யான்சென் 34 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார்.
    • அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார். மேலும் அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் (எதிர்கொண்ட பந்துகள் மூலம்)

    30 - கிறிஸ் கெய்ல் (RCB) vs பி.டபிள்யூ.ஐ, பெங்களூரு, 2013

    37 - யூசுப் பதான் (RR) vs மும்பை, மும்பை பிஎஸ், 2010

    38 - டேவிட் மில்லர் (KXIP) vs ஆர்சிபி, மொஹாலி, 2013

    39 - டிராவிஸ் ஹெட் (SRH) vs ஆர்சிபி, பெங்களூரு, 2024

    39 - பிரியான்ஷ் ஆர்யா (PBKS) vs சிஎஸ்கே, முல்லாப்பூர், 2025*

    ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரர்களின் சதம்:-

    ஷான் மார்ஷ் vs RR, 2008

    மணீஷ் பாண்டே vs DEC, 2009

    பால் வால்தாட்டி (KXIP) vs CSK, 2009

    தேவ்தத் படிக்கல் (RCB) vs RR, 2021

    ரஜத் படிதார் (RCB) vs LSG, 2022

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) vs MI, 2022

    பிரப்சிம்ரன் சிங் vs (DC), 2023

    பிரியான்ஷ் ஆர்யா (பிபிகேஎஸ்) எதிராக சிஎஸ்கே, 2025*

    • ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இந்த தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் இடம் பெற்றுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் அறிமுகமாகி உள்ளார்.

    வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் புய்யான் அன்கான், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், சையத் காலித் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்

    போட்டி அட்டவணை விவரம்:

    முதல் டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 20-24 - சில்ஹெட்

    2வது டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 28 - மே 02 - சட்டோகிராம்

    • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
    • நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

    • மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதே போல் கொல்கத்தா, சென்னையை ஆர்சிபி வீழ்த்தியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரஜத் படிதார் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் இதுவரை செய்யாத ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இது டி20 லீக் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனையாகும்.

    ஒரே ஐபிஎல் சீசனில் ஈடன் கார்டனில் KKR-யும், சேப்பாக்கத்தில் CSK-யும், வான்கடேயில் MI-யும் வீழ்த்திய அணிகள் இரண்டுதான். ஒன்று பஞ்சாப் மற்றொன்று ஆர்சிபி ஆகும்.

     

    பஞ்சாப் கிங்ஸ் 2012-ல் அவ்வாறு செய்தது. ஆனால் அந்த வெற்றிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் வந்தன. ஆடம் கில்கிறிஸ்டின் தலைமையில் ஈடன் கார்டனில் KKR அணியை வீழ்த்திய PBKS, பின்னர் டேவிட் ஹஸ்ஸி தலைமையில் MI மற்றும் CSK அணிகளை வீழ்த்தியது.

    எனவே ஒரே சீசனில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடியவர்.
    • கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு வகையில் சிறப்பாக விளையாடியவர்.

    இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி வந்தார். கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடிவர். கேப்டன் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ப்ளேயராக இருந்தார். பின்னர் Unsold ப்ளேயர் ஆனார்.

    இதனையடுத்து கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் கேதர் ஜாதவ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதர் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது. அவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    • லக்னோ அணியில் பூரன் 87 ரன்கள் குவித்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சித் ராணா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்தில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த பூரன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 21 பந்தில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும்.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது.
    • இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. தற்போது பெரிய அளவு வெப்பம் இல்லை. அதனால் ஆடுகளமும் பெரிய அளவு மாறாது என நினைக்கிறேன். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி அளவு சிறியதாக இருக்கிறது. இதனால் தான் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறோம் என்றார்.

    இதனை தொடர்ந்து பேசிய பண்ட், லக்னோ அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன். எங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். ஒரு கேப்டனாக என் அணி வென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் அதே பிளேயிங் லெவன் வைத்து தான் விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.

    அவர் முதலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன் என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் லக்னோ அணி உரிமையாளர் எப்போதுமே தன் அணி கேப்டனுடன் நல்ல உறவில் இருப்பதில்லை. ஏற்கனவே ராகுலுடனான பிரச்சனையை அவர் சந்தித்த நிலையில் தற்போது பண்ட் இடமும் அதே போல் நடந்து கொள்கிறார். இதனால் தான் பண்ட் இவ்வாறு சொல்லிவிட்டாரா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது கோலியிடம் சீண்டியதும் ரசிகர்களை கவர்ந்தது.
    • ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா இடையே நடந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. பரபரப்பாக சென்ற போட்டிக்கு மத்தியில் வீரர்களிடையே சில சேட்டைகளும் அன்புமும் வெளிப்பட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலியை பும்ரா ரன் அவுட் அடிக்க முயற்சி செய்த போது அவர்களிடையே சேட்டை கலந்த அன்பு வெளிப்பட்டது.

    அதனை தொடர்ந்து விராட் கோலி பேட்டிங் செய்த போது களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் அவர் மீது தோளில் கைபோட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போலவும், ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது கோலியிடம் சீண்டியதும் ரசிகர்களை கவர்ந்தது.

    ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஹர்திக் பாண்ட்யா விளையாடி கொண்டிருப்பார். அப்போது அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா பந்து வீசவார். அந்த ஓவரில் ஹர்திக் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விடுவார். அடுத்த பந்தை வீச வந்த குர்ணால், நின்று விட்டு, மீண்டும் பந்து வீச செல்வார். உடனே இருவரும் சிரித்து கொள்வார்கள். சகோதர்களிடையே அந்த சம்பவம் மற்ற கிரிக்கெட் சகோதர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இறுதியாக இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக்கொண்டனர். அப்போது விராட் கோலி, ரோகித் சர்மா கைகுலுக்கிக் கொள்வார்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சிரித்தப்படி செல்வார்கள். இவை அனைத்தும் ஒரே வீடியோவாக எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
    • இதில் 3-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணியும் 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன.

    • இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

    இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.

    இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

    இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.

    அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. 

    இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.

    ×