என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    KKR-க்கு எதிராக வாணவேடிக்கை காட்டிய பூரன்- 238 ரன்கள் குவித்த லக்னோ
    X

    KKR-க்கு எதிராக வாணவேடிக்கை காட்டிய பூரன்- 238 ரன்கள் குவித்த லக்னோ

    • லக்னோ அணியில் பூரன் 87 ரன்கள் குவித்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சித் ராணா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்தில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த பூரன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 21 பந்தில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும்.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×