என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் கேப்டன் - ரஜத் படிதார் வரலாற்று சாதனை
- மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதே போல் கொல்கத்தா, சென்னையை ஆர்சிபி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரஜத் படிதார் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் இதுவரை செய்யாத ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இது டி20 லீக் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனையாகும்.
ஒரே ஐபிஎல் சீசனில் ஈடன் கார்டனில் KKR-யும், சேப்பாக்கத்தில் CSK-யும், வான்கடேயில் MI-யும் வீழ்த்திய அணிகள் இரண்டுதான். ஒன்று பஞ்சாப் மற்றொன்று ஆர்சிபி ஆகும்.
பஞ்சாப் கிங்ஸ் 2012-ல் அவ்வாறு செய்தது. ஆனால் அந்த வெற்றிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் வந்தன. ஆடம் கில்கிறிஸ்டின் தலைமையில் ஈடன் கார்டனில் KKR அணியை வீழ்த்திய PBKS, பின்னர் டேவிட் ஹஸ்ஸி தலைமையில் MI மற்றும் CSK அணிகளை வீழ்த்தியது.
எனவே ஒரே சீசனில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






