என் மலர்
விளையாட்டு
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
- இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:
ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?
இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.
தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஜப்பானின் உஜிஜிமா உடன் மோதினார்.
இதில் ஜெசிகா பெகுலா 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 73 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
- டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 41 ரன்னும், ஸ்டப்ஸ் 34 ரன்னும், அபிஷேக் பொரேல் 28 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், யாஷ் தயாள், குருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் குருணால் பாண்ட்யா இணைந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 119 ரன்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 51 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு கிடைத்த 3வது தோல்வி இதுவாகும்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இரண்டாவது சுற்றில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 7-6 (7-0) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஜுவான் மேனுவலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள், அபிஷேக் போரல் 28, பிளெசிஸ் 22, அசார் படேல் 15 ரன்கள் எடுத்தனர்.
மேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும், யாஷ் தயால் மற்றும் குருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மோதியது.
போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். ரியான் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது.
இந்நிலையில் 19 ஆவது ஓவரில் லக்னோ அணி 161 ரன்களில் 10 விக்கட்டையும் இழந்து சுருண்டது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
- 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்.
சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மதியம் மோதி வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் உடன் ரியான் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்தார்.
ரியான் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்த அவர், 9-வது ஓவரில் திக்விஜேஷ் ரத்தி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய வில் ஜாக்ஸ், 29 ரன்கள் எடுத்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதி ஓவர்களில் நமன் திர்(25 ரன்கள்) மற்றும் கார்பின் போஷ்(20 ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்நிலையில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது.
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
- லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது
- சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை தொடங்கியது. சென்னை அணியின் தொடர் தோல்வியால் டிக்கெட் விற்பனை மந்தமாகியுள்ளது.
எப்போது டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளை விற்று தேர்ந்து விடும். பின்னர் டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் கிட்டத்தட்ட வெளியேறியுள்ளதால் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனையை காட்டிலும் இந்த முறை குறைவான அளவிலேயே விற்பனை தற்போது வரை நடைபெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






