என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Indian"
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
- லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது என, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் டுவிட் செய்துள்ளார். #IPL2018
ஐபிஎல் 11-வது சீசனின் லீக் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. வாழ்வா? சாவா? போட்டியில் வீறுகொண்டு எழுந்து வந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாதது குறித்து ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது ஏமாற்றத்தை அளிக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும், நாம் எதை விரும்புகிறமோ, அதை எப்பொழுதுமே பெற முடியாது. நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால், எதிரணிகள் எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டனர். அடுத்த வரும் இதில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்க்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.