என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

    • மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
    • லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    Next Story
    ×