என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல்: 216 ரன்கள் இலக்கை நோக்கி LSG
    X

    ஐபிஎல்: 216 ரன்கள் இலக்கை நோக்கி LSG

    • டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இன்று மதியம் மோதி வருகிறது.

    போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் உடன் ரியான் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்தார்.

    ரியான் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்த அவர், 9-வது ஓவரில் திக்விஜேஷ் ரத்தி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய வில் ஜாக்ஸ், 29 ரன்கள் எடுத்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதி ஓவர்களில் நமன் திர்(25 ரன்கள்) மற்றும் கார்பின் போஷ்(20 ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இந்நிலையில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் குவித்தது. லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது.

    Next Story
    ×