என் மலர்
விளையாட்டு
- 5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.
- சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான சமயத்தில் சிறந்த நிலைக்கு திரும்பி இருக்கிறது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (373 ரன்), திலக் வர்மா (233), ரோகித் சர்மா (228), ரையான் ரிக்கெல்டனும் (215), பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ராவும் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வெளிநாட்டு நட்சத்திரங்களான நிகோலஸ் பூரன் (377 ரன்), மிட்செல் மார்ஷ் (344), மார்க்ரம் (326) ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஆயுஷ் பதோனியும் ஓரளவு பங்களிப்பை அளிக்கிறார். 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கின்றனர்.
லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தங்களது உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புத்தூர்.
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.
டெல்லி-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (323 ரன்), அபிஷேக் போரெல் (225) ஜொலிக்கின்றனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கேப்டன் அக்ஷர் பட்டேல், அஷூதோஷ் ஷர்மா ஆகியோரும் சுமாரான பங்களிப்பை அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் பலம் சேர்க்கின்றனர்.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 5 அரைசதங்களுடன் 392 ரன்கள் எடுத்துள்ளார். பில் சால்ட், தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதாரும் சோபிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.
சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
டெல்லி: அபிஷேக் போரெல், பாப் டு பிளிஸ்சிஸ், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா,
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் சிட்சிபாஸ், ஜெர்மன் வீரர் ஜேன் லென்னார்டு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை3-6 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிலி வீரர் நிகோலஸ் ஜேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடர் சீனாவில் இன்று தொடங்குகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியது.
பீஜிங்:
பிரபல பேட்மிண்டன் தொடரான சுதிர்மன் கோப்பை தொடர் (கலப்பு அணிகள்) சீனாவில் இன்று தொடங்குகிறது. இதுவரை நடந்த 18 தொடரில் சீனா (13), தென் கொரியா (4), இந்தோனேஷியா (1) என 3 அணிகளே கோப்பை வென்றன.
இந்திய அணி ஒருமுறைகூட டாப் 3-ல் இடம்பிடித்தது இல்லை.
இந்த முறை 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி டி பிரிவில் டென்மார்க், இங்கிலாந்து, இந்தோனேஷியா என வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 போட்டி நடக்கும். புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணியில் சிந்து, லக்ஷயா சென், பிரனாய் என அனுபவ நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் நட்சத்திர ஜோடியான சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக விலகியது.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் காயத்ரி கோபிசந்த்-திரிசா ஜோடி காயம் காரணமாக விலகியுள்ளது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஆன் லி உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் மேக்டலீனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.
பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரியான்ஷ் ஆர்யா 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
- பிரப்சிம்ரன் சிங் 49 பந்தில் 83 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.
முதல் ஓவரில் 10 ரன்களும், 3ஆவது ஓவரில் 12 ரன்களும், 4ஆவது ஓவரில் 18 ரன்களும், 5ஆவது ஓவரில் 11 ரன்களும், விளாசினர். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்று 56 ரன்கள் சேர்த்தது.
10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது. 12 ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஆர்யா ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அப்போது பஞ்சாப் 11.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மார்கோ யான்சன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணிக்கு 17 ஆவது ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 174 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் கிடைத்தன. 184 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க பஞ்சாப் 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:-
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஓமர்சாய், மார்கோ யான்சன், ஆர்ஷ்தீப் சிங், சாஹல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
குர்பாஸ், சுனில் நரைன், ரகானே, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரசல், ரோவன் பொவேல், சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா
- மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம்.
- ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை.
ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 154 ரன்களில் ஆல்அவுட்டாகி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை. இதனால் தோல்வியை சந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
"மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம். ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழ் வரை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
- நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி (ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி (பெங்களூரு, மும்பை, லக்னோ, பஞ்சாப், குஜராத் அணிகளிடம்) கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு அணிக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம்) 5-வது இடத்தில் இருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
- ஜாக் காலிஸ், கேஎல் ராகுல், பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஐதராபாத் அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதுவரை அவர் 4 விக்கெட்டுகளை முதல் பந்திலேயே பந்தில் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஜாக் காலிஸ், கேஎல் ராகுல் மற்றும் பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
முகமது ஷமிக்கு அடுத்தபடியாக லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே 3 முறை விக்கெட் எடுத்துள்ளனர்.






