என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மழையால் கொல்கத்தா, பஞ்சாப் இடையிலான ஆட்டம் ரத்து
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.
பிரியன்ஷு ஆர்யா 69 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.