என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    விராட் கோலி, குருணால் பாண்ட்யா அசத்தல்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி
    X

    விராட் கோலி, குருணால் பாண்ட்யா அசத்தல்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி

    • டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 41 ரன்னும், ஸ்டப்ஸ் 34 ரன்னும், அபிஷேக் பொரேல் 28 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், யாஷ் தயாள், குருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் குருணால் பாண்ட்யா இணைந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 119 ரன்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 51 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு கிடைத்த 3வது தோல்வி இதுவாகும்.

    Next Story
    ×