என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல் 2025: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ்
    X

    ஐ.பி.எல் 2025: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ்

    • 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள், அபிஷேக் போரல் 28, பிளெசிஸ் 22, அசார் படேல் 15 ரன்கள் எடுத்தனர்.

    மேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும், யாஷ் தயால் மற்றும் குருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது.

    Next Story
    ×