என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
    • இதன்மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறியது.

    அகமதாபாத்:

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி

    2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

    இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.

    3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 7-6 (10-8), 6-3 என வென்றார். 3வது செட்டை பென் ஷெல்டன் 6-4 என கைப்பற்றினார்.

    4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் கீசி கார்டி சதமத்து அசத்தினார்.

    கார்டிப்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீசி கார்டி சிறப்பாக அடி சதமடித்து 103 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 78 ரன்கள் எடுத்தார். பிராண்டன் கிங் 59 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் அதில் ரஷீத் 4 விக்கெட்டும், சாகிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்-வில் ஜாக்ஸ் ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    தனியாகப் போராடிய ஜோ ரூட் சதமடித்து, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

    பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி,

    பிரிட்டனின் இவான் கிங்-கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் நான்காவது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக் அடுத்த இரு சுற்றுகளை சிறப்பாக ஆடி 6-3, 7-5 என்ற செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் ஸ்வியாடெக் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 7-5, 6-3 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா சீனாவின் குயின்வென் ஜெங் உடன் மோதுகிறார்.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
    • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.

    அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.

    அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார். 

    • எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
    • இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க இருந்தது.

    டாஸ் போடப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
    • இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
    • என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.

    ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய பும்ரா, "நான் தீவிரமாக 2 விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒன்று எனது குடும்பம், மற்றொன்று கிரிக்கெட். ஆனால் எனக்கு, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட என்னுடைய குடும்பம் முக்கியமானது. ஏனென்றால் குடும்பம் தான் நிலையானது என்பது உங்களுக்குத் தெரியும்,

    என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. நான் அவர்களில் ஒருவன், ஒரு மனிதன்" என்று தெரிவித்தார்.

    • இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
    • இப்போட்டியில் பி.எஸ்.ஜி அணி 5 கோல்கள் அடித்து அசத்தியது.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

    இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பி.எஸ்.ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கொல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 - 0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    ×