என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐ,பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
    • குவாலிபையர்1 ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

    அகமதாபாத்:

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 26-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

    மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2-வது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014-ல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (516 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (431 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), ஜோஷ் இங்கிலீஷ், வதேரா, ஷசாங்க் சிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் இருக்கிறது.

    அந்த அணியின் பந்து வீச்சில் பும்ரா துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இதுவரை 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), ரோகித் சர்மா (410 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, பேர்ஸ்டோவ், நமன் தீர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், டிரென்ட் போல்ட் (21 விக்கெட்), சாண்ட்னர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 19-21, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் எடுத்தது.
    • கருண் நாயர் இரட்டை சதமடித்து 204 ரன்னில் அவுட் ஆகினார்.

    கான்டேபெரி:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது.

    இதற்கிடையே, இங்கிலாந்து தொடருக்கு முன் இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இணைந்த கருண் நாயர்,சர்பராஸ் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி 204 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஜோஷ் ஹல், ஜமான் அக்தர் தலா 3 விக்கெட்டும், எடி ஜேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹைன்ஸ் சதமடித்து 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேக்ஸ் ஹோல்டன் அரை சதம் கடந்து 64 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்துள்ளது. எமிலோ கே 46 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.

    • சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.

    மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 

    • இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லாவிதமான ஷாட்டுகளும் இருக்கின்றன.
    • கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் குஜராத் முதலில் தடுமாறிய போது தமிழக வீரர்களான சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிக்காக போராடினார். இருந்து குஜராத் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இருந்தாலும் நடப்பு தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் சராசரியுடன் 759 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஆறு அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில்

    சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லா விதமான ஷாட்டுகளும் இருக்கின்றன. மேலும் டெக்னிக்கலாகவும் அவர் மிகவும் வலுவாக இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் நிச்சயம் சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள ஸ்கில்களை வைத்து அவரால் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஏற்கனவே இங்கிலாந்தில் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும். சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் அசத்துவார்.

    என ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

    • 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது.
    • இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் 5-வது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 4*100மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.

    • எலிமினேட்டர் போட்டியில் பாண்ட்யா- கில் இடையே ஈகோ மோதல் வெளிப்பட்டதாக வீடியோ வைரலானது.
    • ஹர்திக் பாண்ட்யா சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்த போது கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார்.

    முல்லான்பூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது.

    அந்த வீடியோவில், டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா, எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். இதனை தொடர்ந்து சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.

    இந்நிலையில் அன்பைத் தவிர வேறொன்றுமில்லை (இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்) குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யாவை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் கில் ஸ்டோரி வைத்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

    • 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.
    • பந்தய தூரத்தை அவர் 56.46s வினாடிகளில் கடந்தார்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் வரை நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இதில் அவர் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 56.46s வினாடிகளில் கடந்தார்.

    இந்த போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு அவரின் சகோதரி நித்யா இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • கருண் நாயர் 204 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
    • 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். அவர் 204 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

    2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் எடுத்துள்ளது.

    • அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு.
    • இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறையும் சொல்லும்படி இல்லை.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

    இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் குஜராத் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் கேப்டனே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா விளக்கத்துடன் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணியின் உத்தி சிறப்பாக செயல்படுவதை விட அவர்களுக்கே எதிர்வினையாற்றுவதாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில்தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனையும் கில் செய்யவில்லை.

    அவர்கள் சரியான திசையில் செல்லத் தவறிவிட்டனர். அவருடைய 2 ஓவர்களில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்சுகளை தவற விட்ட நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்று எதிர்பார்க்க கூடாது.

    என்று உத்தப்பா கூறினார்.

    • துபாயில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வை கேரள அமைப்பு நடத்தியது.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    பாகிஸ்தானில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

    பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி வந்தார்.

    இந்நிலையில், துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    கேரள கொச்சின் பல்கலைக்கழகத்தின் பி.டெக் முன்னாள் மாணவர்கள் அமைப்பு(CUBAA), முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்றை துபாயில் நடத்தியுள்ளது.

    இந்த விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இருவருக்கும் உற்சாக வரவேற்பளித்து மேடையில் பேச வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவிற்கு எதிராக பேசியவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது இந்தியாவை அவமதிக்கும் செயல், என சமூகவலைத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விளக்கமளித்துள்ள CUBAA அமைப்பு, "அன்று எங்கள் நிகழ்வு நடந்த இடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்வு நடைபெற்றது.

    எங்களின் நிகழ்வு முடியும் தருவாயில், அவர்கள் எங்களின் அழைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் வருகை தந்தனர். எங்கள் தரப்பில் இருந்து யாரும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை" என தெரிவித்துள்ளனர்.

    • எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் கில், பாண்ட்யா இடையே ஈகோ மோதல் வெளிப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    முல்லான்பூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 போட்டியில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுப்மன் கில் இடையே ஈகோ மோதல் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

    அந்த வகையில் இந்தப் போட்டிக்கான டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்றார். உடனே எதிர் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கை குலுக்க வந்தார். ஆனால், சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் அவரை கடந்து சென்றார். அந்த நிகழ்வை ஹர்திக் பாண்டியா சமாளித்து விட்டார்.

    இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடத் தொடங்கியது. அப்போது சுப்மன் கில் 1 ரன்னில் வெளியேறினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா ஓடிவந்து சுப்மன் கில் முகத்துக்கு நேராக சத்தமிட்டு, அவரது விக்கெட்டை கொண்டாடினார்.

    சுப்மன் கில் மீது கோபத்தில் இருந்ததால்தான் ஹர்திக் பாண்டியா இவ்வாறு செய்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் சிலர் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனான கெத்தில் இதெல்லாம் செய்வதாக கூறி வருகின்றனர்.

    சுப்மன் கில் இதற்கு முன்பும் இதே போல எதிர் அணி கேப்டன்களுக்கு கை கொடுக்காமல் சென்ற விவகாரம் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு முன், ரிஷப் பண்ட் ஒரு போட்டியின் முடிவில் பேசுவதற்கு வந்த போது சுப்மன் கில் அவரைத் தவிர்த்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×