என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச்சுற்று-2ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    போட்டிக்கு பின்பு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் ஜஸ்ப்ரித் பும்ரா எப்போது பந்து வீச வேண்டும் என நீங்கள் எப்படி முடிவு எடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "அது மிகவும் சுலபமானது. போட்டி எப்போதெல்லாம் எங்கள் கையை மீறி செல்கிறது என உணர்கிறோமோ அப்போதெல்லாம் பும்ரா தான்" என்று பதில் அளித்தார். 

    • 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.

    இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் தொப்பி ரேஸிலும் சாய் சுதர்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன்.3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (973 ரன்கள்) சுப்மன் கில் (890 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ள நிலையில், இந்த சீசனில் 759 ரன்கள் அடித்து சாய் சுதர்சன்.3வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் 700 ரன்களுக்கு மேல் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் (23) படைத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் தொப்பி ரேஸிலும் சாய் சுதர்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
    • குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் குழந்தைகள் மனமுடைந்து அழுதனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    • குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தாண்டு கண்டிப்பாக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    "ஈ சாலா கப் நம்தே" என்ற ஆர்.சி.பி. ரசிகர்களின் முழக்கம் உண்மையாக இன்னும் ஒரு போட்டி தான் மீதமுள்ளது. ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணிதான் கோப்பையை வெல்லும் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு ரசிகர்கள் கூறும் வாசகத்தை (ஈ சாலா கப் நம்தே) சொல்ல வேண்டாம் என விராட் கோலி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் நமக்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன் ஆர்.சி.பி. அணி முதல்முறையாக கோப்பையை வெல்லப்போகிறது" என்று தெரிவித்தார். 

    • எலிமினேட்டர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் 25+ ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார். நடப்பு சீசனில் அவர் விளையாடிய 15 போட்டிகளிலும் 25+ ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-செக் வீரர் ஆடம் பவ்லாசெக் ஜோடி,

    பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரீபோல் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 6-7 (2-7), 7-6-(7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.

    ஏற்கனவே இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • 4-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    முதல் இரு சுற்றுகளில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தோல்வி கண்டார். 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்திய குகேஷ் 3 புள்ளிகள் பெற்றார்.

    இந்நிலையில், இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பாபியானோ கருணாவை சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை முடிவுசெய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியோ கருணாவுக்கு அதிர்ச்சி அளித்தார். குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    நான்காவது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருணா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 5.5 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ், அர்ஜூன் எரிகைசி தலா 4.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போஸ்னியாவின் டாமிர் டூமுர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 6-1, 6-3 என வென்றார். 3வது செட்டை டாமிர் 6-4 என கைப்பற்றினார். 4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 4-6, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரினோ நவோனேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடந்தது.
    • இதில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

    சண்டிகர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    சண்டிகரில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை 228 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

    இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-4, 6-1 என்ற செட்கணக்கில் உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 228 ரன்களைக் குவித்தது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னும், திலக் வர்மா 25 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 50 பந்தில் 81 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். குசால் மெண்டிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னில் வெளியேறினார். அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ரதர்போர்டு 24 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

    ×