என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஈ சாலா கப் நம்தே... RCB கோப்பையை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது - ஏ.பி. டிவில்லியர்ஸ்
- குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தாண்டு கண்டிப்பாக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"ஈ சாலா கப் நம்தே" என்ற ஆர்.சி.பி. ரசிகர்களின் முழக்கம் உண்மையாக இன்னும் ஒரு போட்டி தான் மீதமுள்ளது. ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணிதான் கோப்பையை வெல்லும் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு ரசிகர்கள் கூறும் வாசகத்தை (ஈ சாலா கப் நம்தே) சொல்ல வேண்டாம் என விராட் கோலி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் நமக்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன் ஆர்.சி.பி. அணி முதல்முறையாக கோப்பையை வெல்லப்போகிறது" என்று தெரிவித்தார்.






