என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய ஏ அணியில் இடம் பிடித்த சர்ப்ராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய ஏ அணி 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், சர்துல் தாக்கூர், நிதீஷ்குமார் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த ஆறு வீரர்களுமே இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருக்க கூடியவர்கள்.

    இவர்களை தவிர சர்பராஸ் கான், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். ருதுராஜ் இன்னும் காயம் சரியாகாததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார். பயிற்சி போட்டியில் சதம் அடித்ததால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி,

    நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்-குரோசியாவின் நிகோலா மெடிக் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-7 (4-7), 7-6-(7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறியது.

    • மும்பை தரப்பில் ரோகித் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் எடுத்த போது பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ரோகித் - சூர்யகுமார் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். 20 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து ரோகித்துடன் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 81 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த திலக் 11 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இறுதியில் நமன் மற்றும் பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில் மும்பையின் சாதனை இலக்கை குஜராத் அணி தகர்த்து குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    • ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் கடந்தார். இதில் 2 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

    இதன்மூலம் ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். மொத்தமாக 2-வது வீரர் ஆவார்.

    முதல் வீரராக கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 8618 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா, டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
    • சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செர்பியா வீராங்கனை டானிலோவிச் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    • குபாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப்- பெங்களூரு அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் முதல் முறையாக முஷீர்கான் களமிறங்கினார்.

    முல்லான்பூர்

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த குவாலிபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20-வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, சைகை மூலம் சக வீரரிடம் 'வாட்டர் பாய்' என்று கூறுவார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.

    இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.  

    • சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
    • இதில் இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பெங்களூரு-பஞ்சாப் ஆகிய அணிகள் நேற்று மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    ஐபிஎல் அணிகளில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளதாக அணியாக ஆர்சிபி உள்ளது. ஆனால் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது அந்த அணி வீரர்களை விட அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

    ஒவ்வொரு தொடரின் போதும், எதாவது ஒரு ஆர்சிபி ரசிகர், ஆர்சிபி கோப்பையை வென்றால்தான் திருமணம் முடிப்பேன், வேலைக்கு செல்வேன் என போட்டியின் போது பேனர்களை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இவர்களுக்கும் மேலாக ஒரு ரசிகர் அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கே ஒரு கடித்தத்தை எழுதியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றால் அந்த நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அந்த அணியின் தீவிர ரசிகர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

    • ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.
    • பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை குல்தீப் சிங் வென்றார்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

    இதே தடகள போட்டியில் இதற்கு முன்பு நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் 82 ரன்கள் குவித்த பெத்தேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்காமில் நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பெத்தேல் 82 ரன்னும், பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 26.2 ஓவர்களில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பெத்தேல் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன் என்றும் இதற்கு விராட் கோலியின் அறிவுரை தான் காரணம் என பெத்தேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் வலுவான நிலையில் இருந்ததால் இன்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது எளிதாக இருந்தது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் என் விளையாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன். அதற்கு விராட் கோலிதான் காரணம். அவர் தன்னுடைய அனுபவங்களையும் பேட்டிங் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்.

    என பெத்தேல் கூறினார்.

    • கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி போன்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் விளையாட உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவின் சீனியர் அணியின் இடம் பிடித்த கேஎல் ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடுவார். அவர் வருகிற திங்கள்கிழமை விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

    ×