என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் லக்னோ, சென்னையிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 679 ரன்), கேப்டன் சுப்மன் கில் (649), ரூதர்போர்டு, ஷாருக்கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 5 அரைசதம் உள்பட 538 ரன்கள் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் மேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் தேசிய அணிக்காக விளையாட வேண்டியதிருப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள குசல் மென்டிஸ் (இலங்கை) அவரது இடத்தை எப்படி நிரப்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்), சாய் கிஷோர் (17), முகமது சிராஜ் (15) அசத்துகின்றனர். இதுவரை 9 விக்கெட்டுகள் (14 ஆட்டம்) வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் இருந்து எதிர்பார்த்த மயாஜாலம் இன்னும் வெளிப்படவில்லை.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி எழுச்சி கண்டது. ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வி கண்டு சற்று சறுக்கியது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (5 அரைசதம் உள்பட 640 ரன்), ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன் திர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் ரையான் ரிக்கெல்டன் (388 ரன்), இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் (233 ரன், 6 விக்கெட்) ஆகியோர் லீக் சுற்றுடன் விலகி இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். ரிக்கெல்டனுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடுகிறார். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (19 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (17), ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மா வலுசேர்க்கின்றனர்.

    நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் முறையே குஜராத் அணி 36 ரன் மற்றும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மென்டிஸ், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், ஜெரால்டு கோட்ஜீ, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    மும்பை: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சரித் அசலங்கா அல்லது பெவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோற்று வெளியேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், 17-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-ம் இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுபியிடம் போராடி வீழ்ந்தார்.

    • முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆர்சிபி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    சண்டிகர்:

    சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், குவாலிபையர் 1 சுற்றில் தோல்வி அடைந்தபின் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:

    முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்களை பவர் பிளேவில் இழந்தோம். நாங்கள் செய்த தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய முடிவுகளை சந்தேகிப்பது கிடையாது.

    நாங்கள் சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருந்தோம். எங்கள் திட்டத்தை களத்தில் பிரதிபலிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியில் பவுலர்களை குறைசொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படி ஒரு குறைந்த ஸ்கோரை யாராலும் தற்காத்துக் கொள்ள முடியாது.

    நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக பயிற்சி செய்யவேண்டும். நாங்கள் இங்கு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை வித்தியாசமாக இருந்தது. இதுபோல ஒரு காரணத்தை எல்லாம் தொழில்முறை கிரிக்கெட்டில் சொல்ல முடியாது. சூழலுக்கு ஏற்ப சரியாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும்.

    நாங்கள் மோதலில் தோற்றுவிட்டோமே தவிர, போரில் தோற்கவில்லை. இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியுடன் மோதியது.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் கோரண்டின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 7-6 (7-1) 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 400 ரன்கள் குவித்தது.
    • பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பெர்மிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்மிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    ஜேக்கப் பெத்தேல் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கேப்டன் ஷாய் ஹோப் 25 ரன்னும், கீசி கார்டி 22 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தது.

    ஜெய்டன் சீல்ஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டும், அதில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை டெரேசா வேலன்டோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-4 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட்கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஆன் லீயை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடந்த குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆர்சிபி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது.
    • தனது நாட்டுக்காக விளையாடுவதால் ஜாஸ் பட்லர் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார்.

    நியூ சண்டிகர்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆப் சுற்று நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன் னேறும்.

    நாளை (30-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடை பெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த குஜராத் டைட் டன்ஸ்-4ம் இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி பஞ்சாப்-பெங்களூரு இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும்.இதில் வெல்லும் அணி 2-வதாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும்.

    குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு முன்னேறப் போவது குஜராத்தா? மும்பையா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் 36 ரன் வித்தியாசத்திலும், மும்பை வான்கடே மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. இதனால் குஜராத் மிகுந்த நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்சை எதிர் கொள் ளும். அதே நேரத்தில் அந்த அணி கடந்த 2 ஆட்டத்தில் லக்னோ, சென்னையிடம் தோற்று இருந்தது.

    மேலும் 538 ரன்கள் குவித்த முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) தனது நாட்டுக்காக விளையாடுவதால் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார். இது குஜராத்துக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த குஷால் மெண்டீஸ் இடம் பெற்றுள்ளார். கேப்டன் சுப்மன் கில் (649 ரன்) , சாய் சுதர்சன்( 679 ) , ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவே தியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் , பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்) சாய்கிஷோர் (17 ), முகமது சிராஜ் (15) ரஷீத்கான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அந்த அணி குஜராத்தை தோற்கடித்து 'குவாலிபையர்-2' ஆட்டத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ரிக்கல்டன், வில்ஜேக்ஸ் ஆடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே. அவர்களுக்கு பதில் பேர்ஸ்டோவ், அசலெங்கா ஒப்பந்தாகி உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (640 ரன்) கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன்தீர் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), போல்ட் (19 விக்கெட்), தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
    • முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 101 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கதில் இருந்தே தடுமாறியது.

    முதலில் விக்கெட்டுகள் வீழ்ந்த போது அடுத்த வந்த வீரர்கள் பொறுமையாக விளையாடாமல் அதிரடியாக விளையாடியதால் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணியை ரஜத் படிதார் தலைமை தாங்கினார். ஆனால் களத்தில் இருந்து பீல்டிங் சரி செய்வது, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு இந்த பந்தை போடுங்கள் என ஆர்சிபி பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை கூறுவது என மொத்தமாக கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகியான கங்காவை பார் என்பது போல மீண்டும் கேப்டனாக மாறிய விராட் கோலியை பார் என காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்சிபி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் சேர்த்தார்.
    • ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். என்றாலும் 26 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் பஞ்சாப் அணியால் சரிவில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்னில் சுருண்டது. ஆர்சிபி அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 18 ரன்கள் எடுத்தார்.
    • ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர் 1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பஞ்சாப்பின் ஒரே ஒரு நம்பிக்கையாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஓமர்சாய் உள்ளனர். இவர்களும் வெளியேறினால் பஞ்சாப் 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும்.

    ×