என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி
    X

    முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 400 ரன்கள் குவித்தது.
    • பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பெர்மிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்மிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    ஜேக்கப் பெத்தேல் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கேப்டன் ஷாய் ஹோப் 25 ரன்னும், கீசி கார்டி 22 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தது.

    ஜெய்டன் சீல்ஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டும், அதில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×