என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெத்தேல்"

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் 82 ரன்கள் குவித்த பெத்தேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்காமில் நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பெத்தேல் 82 ரன்னும், பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 26.2 ஓவர்களில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பெத்தேல் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன் என்றும் இதற்கு விராட் கோலியின் அறிவுரை தான் காரணம் என பெத்தேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் வலுவான நிலையில் இருந்ததால் இன்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது எளிதாக இருந்தது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் என் விளையாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்தியாவுக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான் சிறந்த வீரராக உணர்கிறேன். அதற்கு விராட் கோலிதான் காரணம். அவர் தன்னுடைய அனுபவங்களையும் பேட்டிங் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்.

    என பெத்தேல் கூறினார்.

    ×