என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: கேரளா நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு உற்சாக வரவேற்பு: வலுக்கும் கண்டனம்
- துபாயில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வை கேரள அமைப்பு நடத்தியது.
- பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
பாகிஸ்தானில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி வந்தார்.
இந்நிலையில், துபாயில் கேரள அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், அப்ரிடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரள கொச்சின் பல்கலைக்கழகத்தின் பி.டெக் முன்னாள் மாணவர்கள் அமைப்பு(CUBAA), முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்றை துபாயில் நடத்தியுள்ளது.
இந்த விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இருவருக்கும் உற்சாக வரவேற்பளித்து மேடையில் பேச வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு எதிராக பேசியவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது இந்தியாவை அவமதிக்கும் செயல், என சமூகவலைத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள CUBAA அமைப்பு, "அன்று எங்கள் நிகழ்வு நடந்த இடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்வு நடைபெற்றது.
எங்களின் நிகழ்வு முடியும் தருவாயில், அவர்கள் எங்களின் அழைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் வருகை தந்தனர். எங்கள் தரப்பில் இருந்து யாரும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை" என தெரிவித்துள்ளனர்.






