என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இரு அணிகளின் பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்

    வெஸ்ட் இண்டீஸ்: எவின் லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், 
    காட்ரெல், ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியரி.
    ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று மதியம் கட்டாக்கில் வெஸ்ட் இண்டீசுடன் 3-வது போட்டியில் மோதுகிறது.
    கட்டாக்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

    சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள கடைசி சர்வதேச போட்டி இது.

    தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி விசாகப்பட்டினத்தில் எழுச்சி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (159 ரன்), லோகேஷ் ராகுல் (102 ரன்) சதம் அடித்தனர். ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யரும் நொறுக்க இந்திய அணி 387 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது இன்னொரு சிறப்பு அம்சமாக அமைந்தது.

    இந்தியா அணியின் தொடர்ந்து பீல்டிங் தான் கவலைக்குரியதாக உள்ளது. இரு ஆட்டங்களிலும் முக்கிய தருணங்களில் இந்திய பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை விட்டனர். தவறுகளை திருத்திக் கொண்டு பீல்டிங்கில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது.

    கேப்டன் விராட் கோலி முதல் 2 ஆட்டங்களில் (4, 0) சொதப்பினார். மேலும் இந்த மைதானத்தில் அவர் இதுவரை (3 ஒரு நாள் ஆட்டங்களில் முறையே 3, 22, 8 ரன்) ஜொலித்ததில்லை. இந்த சோகத்துக்கு முடிவு கட்டி இந்த ஆட்டத்தில் அவர் ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். மொத்தத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக கைப்பற்றிய 10-வது தொடராக பதிவாகும்.

    திடீரென விசுவரூபம் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் சதம் விளாசிய ஹெட்மயர் (139 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (102, 78 ரன்), நிகோலஸ் பூரன் (29, 75 ரன்) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். கேப்டன் பொல்லார்ட்டும் அதிரடி காட்டுவதில் சளைத்தவர் அல்ல. பந்து வீச்சில் ஷெல்டன் காட்ரெல் அச்சுறுத்துகிறார். ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.8½ கோடிக்கு விலை போன (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) உற்சாகத்துடன் காட்ரெல் களம் இறங்குவார். 

    அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படையினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

    வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியர் அல்லது ஹேடன் வால்ஷ், காட்ரெல்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், இரண்டாவது பாதியில் கொல்கத்தாவின் ராய் கிருஷ்ணா அடித்த அதிரடி கோலால் ஐதராபாத்துடனான ஆட்டம் சமனானது
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதற்கு பதிலடியாக ஐதராபாத் வீரர் போபோ 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில், ஐதராபாத் அணி வீரர் போபோ 85-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

    ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம், கொல்கத்தா அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 3 டிரா மற்றும் 2 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
    கராச்சியில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களின் அபாரமான சதத்தால் பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
    கராச்சி:

    இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ்வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. பாபர் அசாம் 60 ரன்னும், ஆசாத் ஷபிக் 63 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புடெனியா ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார். தனஞ்ஜெயா டி சில்வா 32 ரன்னும், தில்ருவான் பெரேரா 48 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 85.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 21 ரன்னுடனும், அபித் அலி 32 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தனர். ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஷான் மசூத் 135 ரன்னும், அபித் அலி 174 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 57 ரன்னும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்னும் 2 நாள்கள் மீதமுள்ள நிலையில், இலங்கை அணியை விட 315 ரன்கள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி அங்கிருந்த குழந்தைகளை இன்பவெள்ள்த்தில் ஆழ்த்தினார்.
    கொல்கத்தா:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

    இதற்கிடையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் புதன்கிழமை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்படுகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். 

    குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா கோலி

    அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சென்ற கோலி குழந்தைகள் விரும்பிய பரிசுகளை கொடுத்து மகிழ்வித்தார். இறுதியில், குழந்தைகளிடம் உங்களுக்கு கிரிக்கெட் வீரரை பார்க்க விருப்பமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் என குழந்தைகள் பதிலளித்தனர். 

    இதையடுத்து, தனது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை விராட் கோலி கலைத்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனர். 

    பின்னர் அந்த குழந்தைகளுடன் இணைந்து கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கோலி ஆதரவற்ற குழந்தைகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரென் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு என பல மாற்றங்கள் முடிந்ததையடுத்து வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் கொல்கத்தா நகரில் நடந்தது.

    இதில் 146 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உள்பட மொத்தம் 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிகபட்சமாக மொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 29 வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக 8 அணிகள் ரூ.140 கோடியே 30 லட்சம் செலவிட்டன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அறிவுரையை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என அந்த அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.

    ‘சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களுக்கு விருந்தளிப்போம்’ என சாம் கரன் தெரிவித்தார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக தொகைக்கு (ரூ. 5.5 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சாம் கரன் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
    கட்டாக்:

    வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்யில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-1 என்ற களத்தில் சம நிலையில் உள்ளது.

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (22-ந்தேதி) ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகியது.

    இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கோலி, இரு ஆட்டங்களிலும் சோபிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் 4 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் பீல்டிங் சுமாராக இருந்தது. கேட்சுகளை தவறவிட்டதால் விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். இதனால் பீல்டிங்கில் முன்னேற்றம் காண்பது அவசியம். பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் இருப்பதால் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

    பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இன்டீஸ் அணியில் இவின் லீவிஸ், ஷாய் ஷோய்ப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் அதிரடியை பொறுத்து ரன் குவிப்பு இருக்கும். பந்து வீச்சில் காட்ரெல், ஹோல்டர், ஜோசப், ரோஸ்டர் சேஸ் ஆகியோர் உள்ளனர்.

    2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி 387 ரன் குவித்தனர். இதனால் அந்த அணி, பந்து வீச்சில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். அதேபோல் தொடரை வெல்லவும் கடுமையாக போராடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 132 போட்டியில் இந்தியா 63-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டியில் முடிவில்லை.

    இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை சாய்த்து சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஸ்கெம்ப்ரி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். 15-வது நிமிடத்தில் கேரளா கேப்டன் ஒக்பீச்சே ‘பிரீகிக்’ வாய்ப்பில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

    26-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வல்ஸ்கிஸ் அடித்த கோல் சர்ச்சையாக வெடித்தது. அதாவது அந்த சமயத்தில் சென்னை வீரர் ‘பவுல்’ செய்ததால் கேரளா அணியினர் அது குறித்து நடுவருடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சில வினாடி குழப்பத்திற்கு இடையே பந்தை கடத்திச் சென்று சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோலாக்கி விட்டார். ‘பவுல்’ விஷயத்தில் நடுவர் ஒரு முடிவுக்கு வராத நிலையில் கோல் அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேரள வீரர்கள் நடுவரிடம் இடைவிடாது வாக்குவாதம் செய்தனர். களத்தில் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சென்னை வீரர்கள் நடுவரை முற்றுகையிட்டனர். சென்னை அணியின் பயிற்சியாளர், உதவியாளர்கள் ஆப்-சைடு நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் எதையும் நடுவர் கண்டுகொள்ளவில்லை. ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

    இந்த சர்ச்சை முடிந்த உடனே சென்னை வீரர் வல்ஸ்கிஸ் தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் சேங்தே (30-வது நிமிடம்) லாவகமாக கோல் அடித்து சுடச்சுட பதிலடி கொடுத்தார். உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மேலும் ஒரு கோலை போட்டு, கேரளாவை நிலைகுலையச் செய்தார். இதனால் முதல்பாதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வலுவான முன்னிலை பெற்றது.

    பிற்பாதியிலும் இரு அணியினரும் கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 52-வது நிமிடத்தில் சென்னை வீரர் சேங்தே மேலும் ஒரு கோல் அடித்திருக்க வேண்டியது. தனி வீரராக எதிரணியின் கோல் எல்லையை நெருங்கிய அவர், கேரளா வீரர்கள் தன்னை சுற்றியதும் ஓங்கி உதைத்தார். ஆனால் அது மயிரிழையில் கம்பத்திற்கு வெளியே சென்று ஏமாற்றி விட்டது. பந்து அதிகமான நேரம் கேரளா வசமே (63 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் சென்னை தடுப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் எலி சபியா 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் அது சிவப்பு அட்டையாக காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்த ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது.

    முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். கேரளா சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    மோர்கனை வாங்கியிருந்தாலும் தினேஷ் கார்த்திக்தான் கேப்டன் என கொல்கத்தா நைட் ரைடர் என, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் உறுதிப்படுத்தியுள்ளார்.
    இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரது தலைமையில்தான் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்று சாதித்தது.

    கொல்கத்தா அணிக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இதனை கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மறுத்துள்ளார்.

    பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில், ‘‘நிச்சயம் தினேஷ் கார்த்திக்தான் எங்கள் கேப்டன். அதில் மாற்றம் இல்லை. தற்போது சிறந்த கேப்டன்களில் ஒருவராக மோர்கன் விளங்குகிறார். தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்புக்கு உதவுவதில் மிக பொருத்தமானவராக மோர்கன் இருப்பார். அத்துடன் பேட்டிங்கில் 4-வது வரிசையையும் நிரப்புவார்’’ என்றார்.
    யுவராஜ் சிங்கின் முக்கியமான பங்களிப்பு இல்லை என்றால், இந்தியாவால் இரண்டு உலகக்கோப்பையை வென்றிருக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்தியா 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. இந்த இரண்டு கோப்பைகளையும் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா கைப்பற்றியது. ஹர்பஜன் சிங், யுவராஜ், சேவாக் போன்றோர் இரண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் இல்லை என்றால் இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘நாம் உலகக்கோப்பை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணி பெருமைப்படும் வகையில் இருக்கிறது என்றால், அதற்கு யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

    ரசிகர்கள் அடிக்கடி சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, கபில்தேவ் ஆகியோரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனால், யுவராஜ் சிங் மட்டும் இல்லை என்றால், நமக்கு இரண்டு உலகக்கோப்பை கிடைத்திருக்காது.

    யுவராஜ் சிங் இல்லை என்றால் நாம் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறி இருப்போம். சிறந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தற்போது கூட நாம் அரையிறுதிக்கு முன்னேறினோம். ஆனால், உலகக்கோப்பையை வெல்ல, யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தேவை. நாங்கள் அதிர்ஷ்டமானவர்கள். அவரை போன்ற ஒரு வீரரை பெற்றிருந்தோம்.

    2011 உலகக்கோப்பைக்குப் பின் நாம் இரண்டு தொடர்களில் விளையாடியுள்ளோம். நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரை போன்ற ஒரு வீரரை விரைவில் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீது சாடியுள்ளார்.
    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்மின்ஸ் (ரூ. 15.5 கோடி), மோர்கன் (ரூ. 5.25 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 4 கோடி), டாம் பாண்டன் (ரூ. 1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ. 60 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் சங்கர் நாயக் (ரூ. 20 லட்சம்), பிரவிண் தாம்பே (ரூ.20 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணியில் தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், மணிமாறன், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில் வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பையை வாங்கி கொடுத்த கவுதம் காம்பிர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கூறுகையில் ‘‘பேட் கம்மின்ஸை பற்றிய நேர்மறையான கருத்து என்னவெனில், அவர் புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த கூடியவர். ஏனென்றால், அவர் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்தில் வேகம் உள்ளது. ஆனால் டெத் ஒவரில் அவர் எப்படி பந்து வீசுவார் என்ற கவலை உள்ளது. இருந்தாலும் சிறந்த பந்து வீச்சு திறமையை பெற்றவர். 2014-ல் கொல்கத்தா அணியில் இருந்துள்ளார். தற்போது மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடி மூன்று அல்லது நான்கு போட்டிகளை தனிப்பட்ட முறையில் வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், அதிக அளவான பணத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஒட்டுமொத்த அணியையும் பார்த்தீர்கள் என்றால் அந்த்ரே ரஸல், மோர்கன், சுனில் நரைன் போன்றோருக்கு பேக்-அப் வீரர்கள் இல்லை. மோர்கனுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால், மிடில் ஆர்டர் வரிசையில் அவருக்கு மாற்று வீரராக வெளிநாட்டு வீரர் இல்லை.

    அந்த்ரே ரஸல், சுனில் நரைன்

    அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஒருவரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அணியின் வலுவானதாக இருந்திருக்கும். அனைத்து வீரர்களும் தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என்று நங்கள் நம்பியிருக்கிறார்கள்.

    பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டால், லூக்கி பெர்குசன் மாற்று வீரராக களம் இறக்கப்படலாம். ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது. ஆனால், தென்ஆப்பிரிக்கா சீதோஷ்ணநிலை பிடிக்காமல் இங்கிலாந்து வீரர்கள் பலர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இன்னும் ஆறு நாட்களே உள்ளதால் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும்.

    இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக டொமினிக் பெஸ், கிரேக் ஓவர்ட்டன் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களை கூடுதலாக அணியில் சேர்த்துள்ளது. இருவரும் சனிக்கிழமை அணியில் இணைய இருக்கிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட், ஆர்சர், ஜேக் லீச் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
    ×