search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம் காம்பிர்
    X
    கவுதம் காம்பிர்

    வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்யவில்லை: கேகேஆர் மீது கவுதம் காம்பிர் கடும்தாக்கு

    வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீது சாடியுள்ளார்.
    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கம்மின்ஸ் (ரூ. 15.5 கோடி), மோர்கன் (ரூ. 5.25 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 4 கோடி), டாம் பாண்டன் (ரூ. 1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ. 60 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் சங்கர் நாயக் (ரூ. 20 லட்சம்), பிரவிண் தாம்பே (ரூ.20 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணியில் தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், மணிமாறன், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில் வலுவான அணிக்கான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு கோப்பையை வாங்கி கொடுத்த கவுதம் காம்பிர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கூறுகையில் ‘‘பேட் கம்மின்ஸை பற்றிய நேர்மறையான கருத்து என்னவெனில், அவர் புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த கூடியவர். ஏனென்றால், அவர் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்தில் வேகம் உள்ளது. ஆனால் டெத் ஒவரில் அவர் எப்படி பந்து வீசுவார் என்ற கவலை உள்ளது. இருந்தாலும் சிறந்த பந்து வீச்சு திறமையை பெற்றவர். 2014-ல் கொல்கத்தா அணியில் இருந்துள்ளார். தற்போது மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடி மூன்று அல்லது நான்கு போட்டிகளை தனிப்பட்ட முறையில் வென்று கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், அதிக அளவான பணத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஒட்டுமொத்த அணியையும் பார்த்தீர்கள் என்றால் அந்த்ரே ரஸல், மோர்கன், சுனில் நரைன் போன்றோருக்கு பேக்-அப் வீரர்கள் இல்லை. மோர்கனுக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால், மிடில் ஆர்டர் வரிசையில் அவருக்கு மாற்று வீரராக வெளிநாட்டு வீரர் இல்லை.

    அந்த்ரே ரஸல், சுனில் நரைன்

    அணி நிர்வாகம் மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஒருவரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அணியின் வலுவானதாக இருந்திருக்கும். அனைத்து வீரர்களும் தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என்று நங்கள் நம்பியிருக்கிறார்கள்.

    பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டால், லூக்கி பெர்குசன் மாற்று வீரராக களம் இறக்கப்படலாம். ஆனால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரர்கள் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×