என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் ரோகித் சர்மா ஓய்வு கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித்சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ரன்களை குவித்துள்ளார்.

    இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

    இந்த தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் ரோகித்சர்மா தனக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ஒய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு ரோகித் சர்மா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினார்.

    சில தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது பொறுப்பு கேப்டன் பதவியையும் ஏற்று அணியை வழி நடத்தினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பேட்ஸ்மேனான சூரிய குமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி என்று தெரிகிறது. அப்படி அவருக்கு வாய்ப்பு அளித்தால் கேதர் ஜாதவின் இடம் கேள்விக் குறியாகி விடும்.

    விராட் கோலி அவுட்டான நிலையில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்களும், கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல்  51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

    இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது.

    49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.

    இந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கோலி களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

    ஆனால் மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார்.

    கடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

    48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி உறுதியானது.

    ஜடேஜா

    இதனால் கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது.  49-வது ஓவரை கீமோ பால் வீசினார். 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    ஜடேஜா 31 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 39 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 6 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது. 
    கராச்சியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கை 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளதால் வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான் உள்ளது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.

    80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடக்க வீரர்களான ஷான் மசூத் - அபித் அலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.

    முதல் இன்னிங்சில் தடுமாறிய நான்கு வீரர்களும் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தனர். இதனால் பாகிஸ்தான் இன்றைய 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    475 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    தொடக்க வீரர் ஒஷாடா பெர்னாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் இலங்கை 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. பெர்னாண்டோ சதமும், டிக்வெல்லா அரைசதமும் அடித்தனர்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள்

    இதனால் நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தனர். இந்நிலையில்தான் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி104 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழக்க இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 102 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

    இலங்கை அணிக்கு இன்னும் 264 ரன்கள் தேவை. கைவசம் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 10 வருடத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்கும்.
    ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 வருடகால சாதனையை முறியடித்தார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்றது.

    இந்த போட்டிக்கு முன் இந்த ஆண்டில் ரோகித் சர்மா 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இதுவரை 2,379 ரன்களை எடுத்திருந்தார்.

    இன்னும் அவர் 9 ரன் எடுத்தால் ஒரே ஆண்டில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்புடன் இன்று களம் இறங்கினார். 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி களம் இறங்கியது.

    ரோகித் சர்மா பத்து பந்தில் 9 ரன்களை எட்டினார். அப்போது 22 வருடகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார். இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜெயசூர்யா 1997-ம் ஆண்டில் 2387 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
    உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பாபர் அசாமுக்கு மியான்தத் ஆலோசனை வழங்கியுள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக விராட் கோலி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    ஏனென்றால், பாபர் அசாமின் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் விராட் கோலியை போன்ற கிரிக்கெட் ஷாட்டுகளாக உள்ளன. இருந்தாலும் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாபர் அசாம் கூறி வருகிறார். அவருடன் ஒப்பிட்டால் தனது ஆட்டத்தின் திறன் குறைந்து விடும் என நினைக்கிறார்.

    இந்நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பாபர் அசாமுக்கு மியான்தத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘பாபர் அசாம் அற்புதமான பேட்ஸ்மேன். ஆனால், தனது நாட்டிற்காக அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்வது, என்னை யாருடனும் ஒப்பிடுவதால் நான் கவலைப்படுவதில்லை. ஆனால், தொடர்ச்சியாக அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பதுதான். என்னுடைய பேட் அதுபற்றி பேசும். இதைத்தான் பாபர் அசாமுக்கு அறிவுரையாக வழங்குகிறேன்.

    நீங்கள் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்த பின்னர், உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பெருமை அடையும்போதுதான் நீங்களாகவே மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய நேரம். அதற்கு முன் ஒப்பிட்டு பார்க்க நேரம் இல்லை. ஒப்பிட்டு குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதுதான் என்னுடைய அட்வைஸ். அதில் கவனம் செலுத்தாமல், அதிக அளவில் ஸ்கோர் குவிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்’’ என்றார்.
    நிக்கோலஸ் பூரன், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

    எவின் லீவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது லீவிஸ் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ஷாய் ஹோப் உடன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். ஷாய் ஹோப் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் 33 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சேஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அப்போது வெஸ்ட் இண்டீஸ் 31.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஐந்து ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ரன்கள் குவித்தது. நவ்தீப் சைனி வீசிய 46-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரி விளாசினார். ஷமி வீசிய 47-வது ஓவரில் பொல்லார்டு சிக்ஸ் ஒன்று விளாசினார்.

    சர்துல் தாகூர் வீசிய 48-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் ஐந்தாவது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் சேர்த்தார்.

    பூரன் - பொல்லார்டு ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஹோல்டர் களம் இறங்கினார். 6-வது பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்களை விளாசியது.

    பூரன்

    நவ்தீப் சைனி வீசிய 49-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி 44 பந்தில் அரைசதம் அடித்தார் பொல்லார்டு. 5-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது.

    கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார் பொல்லார்டு. இந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

    பொல்லார்டு 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
    ரொபேர்ட்டோ ஃபேர்மினோ கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க பிளமெங்கோ அணியை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது லிவர்பூல்.
    ஜுர்கன் கிளோப் தலைமையில் லிவர்பூல் கால்பந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த வருடத்தில் லிவர்பூல் ஏற்கனவே யூரோ சாம்பியன்ஸ் லீக், யூரோ சூப்பர்கோப்பை ஆகியவற்றை கைப்பற்றிருந்தது.

    இந்நிலையில்  நேற்றிரவு நடைபெற்று கிளப் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிளமெங்கோ அணியை எதிர்கொண்டது.

    பிரேசில் நாட்டின் கால்பந்து கிளப் அணியான பிளமெங்கோவுக்கு எதிராக லிவர்பூல் வீரர்கள் கடுமையான போராடினார்கள். ஆட்டம் முடிவதற்கு முன் லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து. ஆனால், VAR right மூலம் பெனால்டி மறுக்கப்பட்டது.

    கோப்பையுடன் லிவர்பூல் அணி பயிற்சியாளர்

    இதனால் 90 நிமிட ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி முடிவடைந்தது. இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. 99-வது நிமிடத்தில் லிவர்பூலின் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் இந்த வருடத்தில் மூன்று கோப்பைகளை கைப்பற்றி லிவர்பூல் சாதனைப் படைத்துள்ளது.
    14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் இரட்டை சதம் அடித்துள்ளார்.
    கொல்கத்தாவில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மண்டலதிற்கு இடையிலான தொடரில் வைஸ்-பிரசிடென்ட் லெவன் (Vice-President’s XI) - தார்வாத் (Dharwad Zone) அணிகள் மோதின.

    இதில் ராகுல் டிராவிட் மகன் சமித் வைஸ்-பிரசிடென்ட் லெவன் அணிக்காக விளையாடினார். இவர் 256 பந்தில் 22 பவுண்டரியுடன் இரட்டை சதம் அடித்தார். மேலும் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் சேர்த்தார். அத்துடன் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.
    இலங்கைக்கு எதிரான கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் வீரர்கள் நான்கு பேர் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 271 ரன்கள் சேர்த்தது.

    80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடக்க வீரர்களான ஷான் மசூத், அபித் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தனர். ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார்.

    சதம் அடித்த இந்திய வீரர்கள்

    முதல் இன்னிங்சில் தடுமாறிய நான்கு வீரர்களும் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தனர். மேலும், ஒரே இன்னிங்சில் நான்கு வீரர்கள் சதம் அடித்த 2-வது அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (122), ராகுல் டிராவிட் (129), வாசிம் ஜாபர் (138), தினேஷ் கார்த்திக் (129) வங்காள தேசம் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட கிறிஸ் லின் பிக் பாஷ் டி20 லீக்கில் 35 பந்தில் 94 ரன்கள் விளாசினார்.
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் அணிகள் மோதின.

    சிட்னி சிக்சர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் அணியின் ஹீஜ்லெட், பிரியன்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியன்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கிறிஸ் லின் களம் இறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்து சதம் நோக்கி முன்னேறினார். ஆனால் 35 பந்தில் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி, 11 சிக்சர்கள் அடங்கும்.

    ஐபிஎல் ஏலத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கிறிஸ் லின்னை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி வருவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    கராச்சியில் நடைபெறும் 2-வது டெஸ்டில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்த, இலங்கை அணிக்கு 476 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி .
    கராச்சி:

    இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. பாபர் அசாம் 60 ரன்னும், ஆசாத் ஷபிக் 63 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புடெனியா ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 271 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்னில் அவுட்டானார்.

    பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தனர். ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். ஷான் மசூத் 135 ரன்னும், அபித் அலி 174 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    3-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 57 ரன்னும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அசார் அலியும், பாபர் அசாமும் இணைந்து பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினர்.

    இருவரும் வேகமாக ரன் சேர்த்ததால் பாகிஸ்தான் அணி 500 ரன்களை கடந்தது. இருவரும் இணைந்து 148 ரன்களை சேர்த்தனர்.

    அணியின் எண்ணிக்கை 503 ஆக இருக்கும்போது சதமடித்து அசத்திய அசார் அலி 118 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பாபர் அசாமும் சதமடித்தார். பாபர் அசாம் 100 ரன்னை கடந்தபோது பாகிஸ்தான் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 100 ரன்னுடனும், மொகமது ரிஸ்வான் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 476 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இரு அணிகளின் பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்

    வெஸ்ட் இண்டீஸ்: எவின் லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், 
    காட்ரெல், ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியரி.
    ×