என் மலர்
விளையாட்டு
இன்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 எனக் கைப்பற்றியது. இதனால் பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கையை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி வங்காளதேசம் பாகிஸ்தான் செல்ல மறுத்தது.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி இந்தியா மீது தாக்கியுள்ளார்.
இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நேரத்தில் பாகிஸ்தானை விட இந்தியா மிகமிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு.
இலங்கை தொடருக்குப்பின் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற இது திருப்புமுனை. மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்டுவதற்கு முக்கிய பங்காற்றினர்’’ என்றார்.
இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஷிகர் தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியிலும் தவான் இடம் பிடித்துள்ளார்.

34 வயதான பிலாண்டர் 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 13 முறை ஐந்து விக்கெட்டுக்களும், இரண்டு முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 30 ஒருநாள் போட்டியில் 41 விக்கெட்டும், 7 டி20 போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 8 அரைசதங்களுடன் 1619 ரன்கள் அடித்துள்ளார்.
சமீப காலமாக அவர் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 39 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி. வாழ்த்துக்கள். நெருக்கடியான போட்டியில் சிறப்பான பேட்டிங் ஃபெர்பார்மன்ஸ். பேட்டிங்கில் ஜடேஜா முன்னேற்றம் அடைந்துள்ளார். அது இந்திய அணிக்கு முக்கியமானது’’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.
அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பொல்லார்டு பூரனுக்கு அதரவாக இருந்தார். இதனால் தடைக்கான போட்டிகள் முடிந்த அடுத்த போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிரான தொடரில் களம் இறக்கப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 29 ரன்களும், 47 பந்தில் 75 ரன்களும், 64 பந்தில் 89 ரன்களும் விளாசினார்.

இதுகுறித்து நிக்கோலஸ் பூரன் கூறுகையில் ‘‘பொல்லார்டு எனக்கு மூத்த சகோதரர் மாதிரி. அதேபோல் தந்தை போன்றவர். நான் கிரிக்கெட்டிற்கு திரும்பியதில் இருந்தே எனக்கு ஆதரவாக உள்ளார். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பற்றி நன்றாக தெரியும். விளையாட்டிற்கு வெளியிலும் நாங்கள் சிறந்த நண்பர்கள். ஆகவே, பேட்டிங் செய்யும்போது எப்படி உற்சாகமாக விளையாட வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
80 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களான ஷான் மசூத் - அபித் அலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த கேப்டன் அசார் அலி 118 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபர் அசாம் 131 பந்தில் 100 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
475 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை அணிக்கு 476 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
தொடக்க வீரர் ஒஷாடா பெர்னாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். ஒரு கட்டத்தில் இலங்கை 97 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. பெர்னாண்டோ சதமும், டிக்வெல்லா அரைசதமும் அடித்தனர்.
இதனால் நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தனர். இந்நிலையில்தான் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி104 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்துள்ளது. ஒஷாடா பெர்னாண்டோ 102 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ நேற்று எடுத்திருந்த 102 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் ரன்ஏதும் எடுக்க முடியாமல் விழ இலங்கை 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது.


கட்டாக்:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 81 ரன்னும், போல்லார்ட் 74 ரன்னும், ஷாய் ஹோப் 42 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 316 ரன் இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (63), லோகேஷ் ராகுல் (77) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்தனர். அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் (7), ரிஷ்ப்பண்ட் (7), கேதர் ஜாதவ் (9) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனதால் நெருக்கடி ஏற்பட்டது.
ஆனாலும் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா உறுதுணையாக இருந்தார். கோலி 85 ரன்னில் அவுட் ஆனார். அப்போது வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது.
அதன்பின் ஜடேஜா- ஷர்துல் தாகூர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்திய அணி 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ஏற்கனவே 20 ஓவர் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:-
இதுபோன்ற பரபரப்பான ஆட்டங்களை பலமுறை சந்தித்து இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய சிறிய பார்ட்னர்ஷிப் தேவை. கடைசி கட்டத்துக்கு சென்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது அற்புமானது.
உண்மையிலேயே நான் அவுட் ஆனபோது பதட்டம் அடைந்தேன். ஆனால் அப்போது ஜடேஜாவை பார்த்த போது அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவரும், ஷர்துல்தாகூரும் 3 ஓவரில் ஆட்டத்தை மாற்றி விட்டார்கள். வெளியில் அமர்ந்து கொண்டு ஆட்டத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.
2019-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக அமைந்தது. உலக கோப்பை அரை இறுதியின் கடைசி 30 நிமிடங்களை தவிர இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
ஐ.ஐ.சி. கோப்பையை நாங்கள் கைப்பற்ற தொடர்ந்து முயற்சிப்போம். அதை தவிர்த்து நாங்கள் திருப்திகரமாக விளையாடி இருக்கிறோம். எந்த மைதானத்திலும் எதிர் அணியை ஆல்அவுட் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களை பெற்று இருக்கிறோம்.
அதேபோல் இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய சாதனைகளை செய்து உள்ளனர்.
வெளிநாடுகளிலும் தொடர்களை எங்களால் வெல்ல முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் ஆட்டத்தின் மூலம் வெளியே கொண்டு வருகிறோம்.
அதை மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இளம் வீரர்கள் இன்னும் சில ஆண்டுகளில் அதை பின்பற்றி முன்னேறுவார்கள்.
இவ்வாறு கோலி கூறினார்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 10-வது முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தான் என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது. ஆனால் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்கள் சச்சின் தெண்டுல்கர்-சவுரவ் கங்குலி போன்று தரமான பந்து வீச்சாளர்களை இவர்கள் எதிர்கொண்டார்களா? என்ற கேள்வியை முன் வைக்கிறேன். தெண்டுல்கரும், கங்குலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சர்வதேச அணியிலும் உலகத்தரம் வாய்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வலம் வந்தனர்.
பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்புரோஸ், வால்ஷ், ஆஸ்திரேலிய அணியில் கிளைன் மெக்ராத், பிரெட்லீ, தென்ஆப்பிரிக்காவில் ஆலன் டொனால்டு, ஷான் பொல்லாக், இலங்கை அணியில் மலிங்கா, சமிந்தா வாஸ் என்று பேட்ஸ்மேன்களுக்கு சோதனை கொடுக்கக்கூடிய பவுலர்கள் இருந்தனர். இத்தகைய சவாலான பந்து வீச்சை தெண்டுல்கரும், கங்குலியும் எதிர்கொண்டு ரன் குவித்தனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், ஒருவரின் திறமையை எதிராளியை வைத்தே மதிப்பிடலாம் என்று கூறுவார். எனவே தரமான எதிரணி பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதில் இருந்தே அவர்கள் யார் என்பதை மதிப்பிடலாம்.
அதே நேரத்தில் கோலி, ரோகித் சர்மா இப்போது எவ்வளவு இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெண்டுல்கர், கங்குலியின் இன்னிங்ஸ்களை கணக்கிட்டு புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பார்த்தால், கோலி, ரோகித் சர்மா தான் முன்னணியில் இருப்பார்கள். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி 50 ரன்களுக்கு மேல் சராசரியை கொண்டு நம்ப முடியாத நிலையை எட்டியிருக்கிறார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரராக தெண்டுல்கர் இருந்தாலும், அதை காட்டிலும் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்கள் விளாசியிருக்கிறார்.
இவ்வாறு இயான் சேப்பல் அதில் கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித்சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ரன்களை குவித்துள்ளார்.
இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.
இந்த தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரோகித்சர்மா தனக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ஒய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு ரோகித் சர்மா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினார்.
சில தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது பொறுப்பு கேப்டன் பதவியையும் ஏற்று அணியை வழி நடத்தினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பேட்ஸ்மேனான சூரிய குமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி என்று தெரிகிறது. அப்படி அவருக்கு வாய்ப்பு அளித்தால் கேதர் ஜாதவின் இடம் கேள்விக் குறியாகி விடும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்களும், கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது.
49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.
இந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கோலி களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார்.
கடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

இதனால் கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை கீமோ பால் வீசினார். 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜடேஜா 31 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 39 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 6 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.






