என் மலர்
விளையாட்டு
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்பட நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம் வகுத்துள்ளார்.
பல நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துகிறது. இந்த நிலையில் முன்னணி அணிகள் மோதும் ஒரு நாள் தொடரை 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தொடக்க நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஐசிசி அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை குறைக்க ஏதுவாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐசிசி-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் ஒரு நாள் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தீவிரம் காட்டியுள்ளார்.
ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் அவர் 4 நாடுகள் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் 4-வது அணியை கொண்ட 2021-ம் ஆண்டு இந்தப் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 3 நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதன் மூலம் 3 வாரியங்களுக்கும் நிதியாதாரம் பெருகும்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் பெர்த்தில் பகல் - இரவாக நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முதல் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட்டில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ். 39 வயதான அவர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மட்டும் ஆடி வருகிறார்.
முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரது பந்து வீச்சு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீசின் பந்து வீச்சு செயல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அவர் விதிமுறைகளுக்கு மாறாக சட்ட விரோதமாக பந்து வீசுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டியிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹபீசுக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2005-ம் ஆண்டு அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பந்து வீச்சை சரி செய்தார்.
ஹபீஸ் 218 ஒரு நாள் போட்டி, 89 இருபது ஓவர் மற்றும் 55 டெஸ்டில் விளையாடி இருக்கிறார்.

கால்முட்டி காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய வீரர் ஷிகர் தவான், பேட்டிங் செய்வது எப்படி என்பதை நான் மறந்து விடவில்லை என்று கூறினார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியின் போது இடது கால் முட்டியில் காயமடைந்தார். இதற்காக அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன. காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
அதற்கு முன்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் ஐதராபாத்-டெல்லி அணிகள் இடையே டெல்லியில் இன்று தொடங்கும் ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டனாக அவர் களம் இறங்குகிறார். இதையொட்டி 34 வயதான தவான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இது எனக்கு புதிய தொடக்கம். முதலில் விரலில் பந்து தாக்கி காயமடைந்தேன். அதன் பிறகு கழுத்து, கண்ணில், அதன் தொடர்ச்சியாக கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் விளையாடுவது என்னை பாதிக்கவில்லை. எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நான் மறக்கவில்லை. எனது திறமை நிரந்தரமானது. மீண்டும் ரன்கள் குவிப்பேன்.
எனக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்தது மகிழ்ச்சியே. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். என்னை பொறுத்தவரை நான் களம் இறங்கி எனது திறமையை வெளிப்படுத்துவேன். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக உழைக்கிறேன்.
சவால்களை எப்போதும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன். போட்டிகளில் சோபிக்காவிட்டாலும் அதை கண்டு நான் தளர்ந்து விடுவதில்லை. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன். இந்த ரஞ்சி போட்டியில் என்னை ஒரு பெரிய வீரராக நினைத்துக் கொள்ளவில்லை. அணியினருடன் இயல்பாக பழகுகிறேன். எனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு தவான் கூறினார்.
இந்த ரஞ்சி போட்டியில் தவானுடன் சேர்ந்து அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் டெல்லி அணிக்காக ஆடுகிறார்.
இதே போல் சூரத்தில் இன்று தொடங்கும் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் குஜராத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கால் பதிக்கிறார். முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா தனது உடல்தகுதியை நிரூபிக்க இந்த போட்டியில் களம் காணுகிறார்.

கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை விராட் கோலி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் போல் செயல்படுவதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் அளித்த பேட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் ஒப்பிட்டு பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
'விராட் கோலி உடற் தகுதியில் தீவிர கவனம் செலுத்துகிறார். அவரை அணி வீரர்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு கேப்டன் ரன் குவித்தாலும், கடும் பயிற்சி மேற்கொண்டாலும், ரன் எடுக்க விரைவாக ஓடினாலும் மற்ற வீரர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கும்.
அது உங்களது சிறந்த ஆட்டத்தை தானாகவே வெளிக்கொண்டு வந்து விடும். இதைத்தான் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தனது கேப்டன்ஷிப்பில் செய்தார்.

அவர் பயிற்சியின் போது 10 முறை மைதானத்தை சுற்றி வருவார். 3 மணிநேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார். இதனால் அணியில் மற்ற வீரர்களும் அதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய திருந்தது.
இம்ரான்கான், மேட்ச் வின்னர்களை எப்படி சேர்ப்பது என்பதை அறிந்து வைத்து இருந்தார். அதே போல் தான் விராட் கோலியும் செயல்படுகிறார். அவர் தீவிரத்துடன் விளையாடுகிறார். நிறைய ரன்களை குவிக்கிறார். இதனால் அணியில் மற்ற வீரர்களும் கோலியின் தரத்தை பின் தொடர்கிறார்கள்.
களத்தில் மட்டுமல்ல மைதானத்துக்கு வெளியேயும் கோலியை வீரர்கள் பின்பற்றுகிறார்கள். விராட் கோலியின் அணியுடன் ஒப்பிட வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்று கேப்டன் அசார் அலி, பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஷகி சிந்திக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு மகேந்திரசிங் டோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெல்போன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது.
இதில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் டோனி கேப்டனாக நியமித்துள்ளது. தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் அம்லா உள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டி கனவு அணி விவரம் வருமாறு:-
மகேந்திர சிங் டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஹசிம் அம்லா, விராட்கோலி, டிவில்லியர்ஸ், சகீப்-அல்-ஹசன், ஜோஸ் பட்லர், மிச்சேல் ஸ்டார்க், டிரண்ட் போல்ட், மலிங்கா, ரஷித்கான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள டெஸ்ட் கனவு அணி வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), அலிஸ்டர் கூக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டெயில் ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
புதுடெல்லி:
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்த பட்டியலில் 928 புள்ளிகள் பெற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் 4-வது இடத்தில் புஜாரா, 7-வது இடத்தில் ரஹானே ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். மயங்க் அகர்வால் 12-வது இடத்திலும், ரோகித் சர்மா 15-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் பும்ரா 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல் ரவுண்டர்களை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்தில் உள்ளார்.
அணிகளை பொறுத்தவரை 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானைவிட இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதற்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை:
பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், அந்நாட்டுக்கு சென்ற இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, வங்காளதேசம் அணி பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான எஹ்மான் மானி இந்தியாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.
இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர். பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகமிக அதிகம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் இந்த கருத்துக்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கண்டனம் தெரிவித்துள்ளார். எஹ்மான் மானி இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அருண் துமால் கூறுகையில், பெரும்பாலும் லண்டனில் தங்கியிருக்கும் ஒரு நபருக்கு, இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிக்கக்கூட அவர் தகுதியற்றவர். அரிதாகவே பாகிஸ்தானில் இருக்கிறார். பாகிஸ்தானில் அதிக நேரம் செலவிட்டால், அங்குள்ள உண்மையான நிலைமையை அவர் புரிந்துகொள்வார் என குறிப்பிட்டார்.
ஆக்லாந்து ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் செரீனா, வோஸ்னியாக்கி இணைகிறார்கள். இருவரும் இணைந்து ஜோடியாக ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆக்லாந்து:
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த மாதம் மெல்போர்னில் நடக்கும் (ஜனவரி 20-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்தில் நடக்கும் ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் (ஜனவரி 6 முதல் 12 வரை) பங்கேற்க முடிவு செய்துள்ளார். அந்த போட்டியில் அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது தோழியும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்சுடன் (அமெரிக்கா) இணைந்து விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார். செரீனா- வோஸ்னியாக்கி ஜோடியாக ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 10 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. எந்த அணி அங்கு விளையாடும்போது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த அணியே தற்போது பாகிஸ்தான் சென்றது.
இன்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 எனக் கைப்பற்றியது. இதனால் பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கையை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி வங்காளதேசம் பாகிஸ்தான் செல்ல மறுத்தது.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி இந்தியா மீது தாக்கியுள்ளார்.
இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நேரத்தில் பாகிஸ்தானை விட இந்தியா மிகமிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு.
இலங்கை தொடருக்குப்பின் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற இது திருப்புமுனை. மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்டுவதற்கு முக்கிய பங்காற்றினர்’’ என்றார்.

இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றிய நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஷிகர் தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியிலும் தவான் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டனர். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான பிலாண்டர் 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 13 முறை ஐந்து விக்கெட்டுக்களும், இரண்டு முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 30 ஒருநாள் போட்டியில் 41 விக்கெட்டும், 7 டி20 போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 8 அரைசதங்களுடன் 1619 ரன்கள் அடித்துள்ளார்.
2-வது டெஸ்ட் அவரது சொந்த மைதானமான கேப் டவுனில் நடக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடியதோடு கிரிக்கெட் முடித்துக் கொள்கிறார்.