search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான் மற்றும் விராட் கோலி
    X
    இம்ரான்கான் மற்றும் விராட் கோலி

    கேப்டன்ஷிப்பில் விராட் கோலி இம்ரான்கானை போல் செயல்படுகிறார் சோயிப் அக்தர் சொல்கிறார்

    கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை விராட் கோலி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் போல் செயல்படுவதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இவர் அளித்த பேட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் ஒப்பிட்டு பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    'விராட் கோலி உடற் தகுதியில் தீவிர கவனம் செலுத்துகிறார். அவரை அணி வீரர்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு கேப்டன் ரன் குவித்தாலும், கடும் பயிற்சி மேற்கொண்டாலும், ரன் எடுக்க விரைவாக ஓடினாலும் மற்ற வீரர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கும்.

    அது உங்களது சிறந்த ஆட்டத்தை தானாகவே வெளிக்கொண்டு வந்து விடும். இதைத்தான் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தனது கேப்டன்ஷிப்பில் செய்தார்.

    சோயப் அக்தர்

    அவர் பயிற்சியின் போது 10 முறை மைதானத்தை சுற்றி வருவார். 3 மணிநேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார். இதனால் அணியில் மற்ற வீரர்களும் அதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய திருந்தது.

    இம்ரான்கான், மேட்ச் வின்னர்களை எப்படி சேர்ப்பது என்பதை அறிந்து வைத்து இருந்தார். அதே போல் தான் விராட் கோலியும் செயல்படுகிறார். அவர் தீவிரத்துடன் விளையாடுகிறார். நிறைய ரன்களை குவிக்கிறார். இதனால் அணியில் மற்ற வீரர்களும் கோலியின் தரத்தை பின் தொடர்கிறார்கள்.

    களத்தில் மட்டுமல்ல மைதானத்துக்கு வெளியேயும் கோலியை வீரர்கள் பின்பற்றுகிறார்கள். விராட் கோலியின் அணியுடன் ஒப்பிட வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்று கேப்டன் அசார் அலி, பயிற்சியாளர் மிஸ்பா-உல்-‌ஷகி சிந்திக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×