என் மலர்
செய்திகள்

டொமினிக் மெஸ், கிரேக் ஓவர்ட்டன்
தென்ஆப்பிரிக்கா சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் முகாமில் வீரர்கள் பாதிப்பு: மேலும் 2 பேர் அணியில் சேர்ப்பு
தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது. ஆனால், தென்ஆப்பிரிக்கா சீதோஷ்ணநிலை பிடிக்காமல் இங்கிலாந்து வீரர்கள் பலர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இன்னும் ஆறு நாட்களே உள்ளதால் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக டொமினிக் பெஸ், கிரேக் ஓவர்ட்டன் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களை கூடுதலாக அணியில் சேர்த்துள்ளது. இருவரும் சனிக்கிழமை அணியில் இணைய இருக்கிறார்கள்.
பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட், ஆர்சர், ஜேக் லீச் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

Next Story