என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி மற்றும் சாம் கரன்
    X
    டோனி மற்றும் சாம் கரன்

    டோனியின் அறிவுரையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது - சாம் கரன்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரென் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு என பல மாற்றங்கள் முடிந்ததையடுத்து வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் கொல்கத்தா நகரில் நடந்தது.

    இதில் 146 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உள்பட மொத்தம் 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிகபட்சமாக மொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 29 வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக 8 அணிகள் ரூ.140 கோடியே 30 லட்சம் செலவிட்டன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அறிவுரையை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என அந்த அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.

    ‘சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களுக்கு விருந்தளிப்போம்’ என சாம் கரன் தெரிவித்தார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக தொகைக்கு (ரூ. 5.5 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சாம் கரன் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×