என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலையாக அனிசிமோவா 2வது 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-3 என கைப்பற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சபலென்கா, ரிபாகினாவை எதிர்கொள்கிறார்.

    • மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
    • ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    துபாய்:

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இதையடுத்து, ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. முடிவெடுத்துள்ளது.

    இந்நிலையில், வரும் 2029-ம் ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பை விரிவுபடுத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    மகளிர் உலகக் கோப்பையில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2029-ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    • இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரும் நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில்

    விளையாடுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடரில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்கா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எசான் மலிங்கா அணியில் இணைந்துள்ளார்.

    மிலான் ரத்நாயக, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்கா ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷ்ரா, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதார, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மலிங்கா

    இதேபோல், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு டி 20 தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    சுழற்பந்து வீச்சாளரான மதீஷ பதிரன அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளார்.

    சரித் அசலங்க (கேப்டன்), பதும நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா, கமில் மிஷ்ர, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. முத்தரப்பு டி20 தொடர் 17-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது.

    • ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெறுகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    ஏதென்ஸ்:

    ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாஃப்மன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • கடைசி லீக் போட்டியின்போது காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகினார்.
    • இதனால் சாம்பியன் கோப்பை வழங்கப்படும்போது, அவருக்கு பதக்கம் வழங்கப்படவில்லை.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.

    உலக கோப்பைக்கான இந்திய அணியில் பிரதிகா ராவல் இடம் பிடித்திருந்தார். இவர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி அணிக்கு பலம் சேர்த்தார். ஏழு லீக் போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் குவித்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் எடுத்த 122 ரன்கள் இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கியது.

    ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

    உலக கோப்பை தொடரில் ஒரு அணியில் 15 பேர்தான் இடம் பெற முடியும் என்பதால், பிரதிகா ராவல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதனால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பதக்கத்தை பிரதிகா ராவல் பெற முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் இடம்பிடித்த ஷஃபாலி வர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    பிரதமர் மோடி உடனான இந்திய வீராங்கனைகளின் சந்திப்பில் இடம் பெற்றிருந்த பிரதிகா ராவல் உலகக்கோப்பை வெற்றி பதக்கத்தை அணிருந்திருந்தார். அதேவேளையில் மற்றொரு வீராங்கனை அமன்ஜோத் பதக்கம் அணியாமல் இருந்தார். இதனால் உண்மையில் பிரதிகாவிற்கு பதக்கம் கிடைத்துவிட்டதா அல்லது அமன்ஜோத் தன்னுடைய பதக்கத்தை கொடுத்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டது..

    இந்த நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலையீடு காரணமாக தனக்கான பதக்கம் வந்து கொண்டிருப்பதாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதிகா ராவல் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உடனான சந்திப்பில் நான் அணிந்திருக்க பதக்கம் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் கொடுத்தார். அப்போது அந்த பதக்கத்தை பார்த்தபோது எனக்கு உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது. நான் பொதுவாக கண்ணீர் விடக்கூடிய ஆள் இல்லை. ஆனால் அந்த தருணம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

    அதேவேளையில் ஜெய் ஷா எனக்காக ஐசிசி இடம் பேசி பதக்கத்தை வரவைப்பதாகவும், பிரதிகா ராவலுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும் எங்கள் மானேஜரிடம் தெரிவித்திருந்தார். அது உறுதியாகிவிட்டது. தற்போது என்னுடைய பதக்கம் வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.

    • வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2014-ம் ஆண்டு ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
    • நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.

    2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் 2018 இல் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில் தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர் ஹசின் ஜஹான் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

    • வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
    • குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா 119 ரன்களில் சுருண்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பந்தை 33 முறை எதிர்கொண்டுள்ளார். இதில் 5 முறை அவுட்டாகியுள்ளார்.

    மேக்ஸ்வெல்லை அடிக்கடி அவுட்டாக்கி வரும் வருண் சக்கரவர்த்தியை முன்னாள் வீரரும், இந்திய அணியின் தேர்வாளருமான ஸ்ரீகாந்த் பாராட்டிள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்தி கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன. குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார் (அவுட்டாக்குகிறார்), குறிப்பாக மேக்ஸ்வெல்லை பார்க்கும்போது, அவர் கேக் துண்டை லபக் என்று விழுங்குவபோல், உடனடியாக அவுட்டாக்குகிறார்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

    • இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலை மையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இடம்பெற்றுள்ளார்.
    • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தான் வீரர் நோமன் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதேபோல், அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்தரேலிய வீராங்கனை ஆஷ் கார்ட்னர் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • சபலென்கா அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவாவை இன்று சந்திக்கிறார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா, இத்தாலியின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ரிபாகினா, பெகுலாவை சந்திக்கிறார். இரண்டாவது அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவாவை சந்திக்கிறார்.

    • மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
    • அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என அந்தக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ஆடவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    ×