என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த ஆரோவில் அருகே கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே சதீஷ் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியிடம் பழகி வந்தார்.

    இந்த நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பெற்றோர் புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பெற்றோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை வலுக்கட்டாயமாக சதீஷ் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
    புதுவையில் 5 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் அமர வைக்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் புதுவையில் பஸ்கள் இயங்கவில்லை.

    ஊரடங்கின் 4-வது கட்டத்தில் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்தது. இதனையடுத்து உள்ளூர் நகர பஸ்களை மட்டும் நேற்று முதல் இயக்க அரசு முடிவெடுத்தது. ஆனால், சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் நேற்று பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் அரசு பஸ்களை 5 வழித்தடத்தில் மட்டும் இயக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 7 மணி முதல் புதுவை-கோரிமேடு, ரெயில் நிலையம்-கோரிமேடு, புதுவை-நல்லவாடு, புதுவை- தவளக்குப்பம், டி.என்.பாளையம்- வில்லியனூர், புதுவை- முருங்கப்பாக்கம், வில்லியனூர்- பத்துக்கண்ணு ஆகிய 5 வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது.

    புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றது. ஒவ்வொரு முறை பஸ்களை இயக்கும்போது, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

    மேலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் அமர வைக்கப்பட்டனர். இரவு 7 மணி வரை மட்டுமே பஸ்கள் இயங்கும். பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    புதுவையில் இருந்து காரைக்காலுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் கடலூர், நாகை மாவட்டங்கள் வழியாக செல்ல வேண்டும் என்பதால் இரு மாவட்ட கலெக்டர்களின் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இந்த பஸ்களில் ஏறும் பயணிகள் நேரடியாக காரைக்காலுக்கு மட்டுமே செல்ல முடியும்.

    நாளை காலை 6 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் பஸ் காலை 9 மணிக்கு காரைக்கால் சென்றடையும். பின்னர் அங்கிருந்து 12 மணிக்கு புறப்படும் பஸ் மாலை 4 மணிக்கு புதுவை வந்தடையும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி சட்டசபை செயலாளராக ஆர்.முனிசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை செயலாளராக இருந்த வின்சென்ட் ராயர் ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு ஆர்.முனிசாமி சட்டசபையின் புதிய செயலாளராக உடனடியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவர் வகித்து வந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன் இயக்குனர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து கொள்வார்.
    மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியாரிடம் மின்துறையை அளிக்க கூடாது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருமண விழாவில் 50 பேரும், ஈமச்சடங்கிற்கு 20 பேர் மட்டுமே அனுமதி, உண்டு.

    புதுவை மக்கள் காரைக்கால் பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசிடம் பேசி புதுவையில் இருந்து காரைக்கால் பகுதிக்கு பஸ்கள் வழியில் நிற்காமல் நேரடியாக செல்ல முடிவு எடுக்க உள்ளோம்.

    ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அனைவரும் முக கவசத்துடனும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். புதுவையில் கோவிட் வரி (கொரோனா) போட உள்ளோம்.

    இது சம்பந்தமாக அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளோம். அவசிய பணி இல்லாமல் யாரும் வெளியில் சுற்றக்கூடாது. நாளை முதல் பெரிய மார்க்கெட்டில் மீன் அங்காடி திறக்கப்படும்.

    மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் பெறும் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி கொடுத்துள்ளது. புதுவைக்கு சாதகமாக அமையும்.

    மத்திய அரசு தற்போது மின் துறையை தனியாருக்கு வழங்க இருப்பதாக கூறி உள்ளது. இது மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது. விவசாயிகளுக்கும், ஏழை- எளிய மக்களுக்கு மின்சாரம் இலவசமாக தருகிறோம்.

    அதேபோல் தொழிற்சாலைகளுக்கு மின் சலுகைகள் தருகிறோம், மின்துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் எந்த திட்டத்தையும் செய்ய முடியாது.

    இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு இதுவரை பதில் வரவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்தால் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில வருவாயை பெறுக்குவதற்கு கலால்துறை, போக்குவரத்து கேபிள் டி.வி. துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற பல வி‌ஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலர் வருமானம் ஈட்ட மாநில ஒட்டுமொத்த வருவாயை இழக்க கூடாது.

    ஆனால், ஆட்சியாளர்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்ய கூடிய மதுபான தொழிலில் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதற்காக மதுபான கொள்கை வி‌ஷயத்தில் தொடர்ந்து தடுமாற்றத்துடன் முதல்- அமைச்சர் இருந்து வருகிறார்.

    மதுபான விலை ஏற்றம் என்பது மது பிரியர்கள் தலையில் தான் வைக்கப்படும். நியாய மாக கார்ப்பரே‌ஷன் அமைத்து மொத்த மது பான விற்பனையை அரசு செய்தாலோ, சில்லரை கடைகளை ஏலம் விட்டாலோ அரசுக்கு ரூ. ஆயிரம் கோடிக்கு மேலான வருமானம் கிடைக்கும்.

    அதை விடுத்து, அரசு ஊழியர்கள் பல்வேறு தியாகத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறுவது ஏற்புடையது அல்ல. வருவாயை பெருக்க தெள்ளத்தெளிவாக வழிமுறைகள் இருந்தும் அதை செய்யாமல் அரசு ஊழியர்கள் தலையில் கையை வைப்பது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.

    அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

    மின்துறை தனியார் மயமானால் மின்சார விலை உயரும். தனியார் மயமாக்குதல் சம்பந்தமான அறிவிப்பில் காங்கிரஸ் அரசின் முடிவு என்ன என்பதனை தெரிவிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு எனக்கு தெரிந்து ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. இதனை என்ன செய்ய போகிறார்கள். ஏழை மக்களுக்காக இந்த பணத்தை இதுவரை பயன்படுத்தவில்லை.

    அந்த பணத்தில் முதல்-அமைச்சர் தனக்கு தேவையான குறிப்பிட்ட துறைக்கு மட்டும் செலவு செய்வது கண்டிக்கதக்கது.முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் மஞ்சள் கார்டுக்கு அரிசி, துவரம் பருப்பு கொடுக்கலாம்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    புதுவை திருக்கனூரில் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 போலீசார் கைதாகிறார்கள்.
    திருக்கனூர்:

    புதுவை திருக்கனூர் எல்லையில் கடந்த 16-ந் தேதி இரவு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பிரசன்னா, வில்லியனூர் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம் ஆகியோர் பணியில் இருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் விவசாய நிலத்தில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்து போலீசார் சோதனைக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் மது அருந்தியவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 15 பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவற்றை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் இதுகுறித்து நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சம்பவத்தன்று பணியிலிருந்த போலீஸ்காரர்கள் பிரசன்னா, செல்வம் ஆகியோரும் பணிமுடித்து சென்ற ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் கோகுலன், மணிகண்டன் ஆகியோருடன் சோதனைக்கு சென்றதும், அங்கு நடந்த சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு கூறாமல் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மதுபாட்டில்களை எடுத்து சென்ற 4 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதின் பேரில் 4 போலீஸ்காரர்கள் மீதும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

    அதோடு தலைமறைவான 4 போலீஸ்காரர்களையும் கைது செய்ய சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று இரவு கூனிச்சம்பட்டு மற்றும் செட்டிப்பட்டு பகுதியில் தலைமறைவான போலீஸ்காரர்களின் வீடுகளில் சென்று தேடினர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. மேலும் மயிலம் பகுதியில் 4 போலீசாரும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அதிரடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அங்கும் அவர்கள் இல்லை. தொடர்ந்து தலைமறைவான 4 போலீசாரையும் கைது செய்ய அதிரடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இன்று இரவுக்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகரில் சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார்நகர் வினோபா வீதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது46). அரசு துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி முனியன் (43). இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். முனியன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ஆதிகேசவன், தனுஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து எட்டியப்பனை இரும்பு கம்பியால் தாக்கினர். அதுபோல் எட்டியப்பன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கோகுல், ராஜவேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து முனியனை தாக்கி பிளேடால் வெட்டினர். மேலும் ஒருவரையொருவர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டனர்.

    இந்த மோதலில் எட்டியப்பன், முனியன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் மதுக்கடை உரிமையாளர்கள் இருப்புகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய புதிய இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் மதுக்கடை உரிமையாளர்கள் இருப்புகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய புதுவை கலால் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருண், கலால் துறை துணை ஆணையர் சஷ்வத்சவ்ரப், மதுக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மதுக்கடை உரிமையாளர்கள் தற்போது மாதம் ஒரு முறை சரக்கு இருப்பு விபரங்களை காகித முறையில் அளிக்கின்றனர்.

    இனிமேல் இந்த புதிய இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு சரக்கு விற்றது, மீதமுள்ள இருப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் அடுத்த கட்டமாக பார்கோடிங் மூலம் விற்கும் போதே இருப்புகள் அப்டேட் செய்ய அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    கூட்டத்தில் மதுபான கடை உரிமையாளர்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம், 56 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளை திறக்க உள்ளோம். ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. எனவே சரக்கு இருப்பு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையேற்ற அமைச்சர் நமச்சிவாயம் ஜூன் 1-ந் தேதி முதல் அனைத்து சரக்கு இருப்புகளை ஆன்லைனில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். அதுவரை இருப்புகளை கலால்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சி சார்பில் 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்கள், தொழிலாளர் நலச்சட்ட திருத்தம் ஆகியவற்றை எதிர்த்தும், ஊரக வேலை உறுதி திட்டம், மக்களின் வாழ்க்கை செலவிற்கு உதவித்தொகை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுவை மாநிலத்தில் 10 இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக இடை வெளியை பின்பற்றி முககவசம் அணிந்து நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, சரளா, கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நவீன் தனராமன் மற்றும் தொகுதி செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    புதுவையில் அண்ணா நகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலு வலகம், உழவர்சந்தை, வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், மண்ணாடிப்பட்டு, ஏம்பலம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய 8 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு உரிய நிதி, கொரோனா நிதி வழங்க வேண்டும், மாநில அரசு ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    வில்லியனூரில் தந்தை சொத்தை பிரித்து தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவாய் பேட்டை புதுநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவரது மகன் பாலாஜி (வயது30). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜியை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    வேலைக்கு ஏதும் செல்லாத பாலாஜி மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்து வந்தார். இதற்கிடையே பாலாஜி தனது தந்தை கலியமூர்த்தியிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்தார். ஆனால் கலியமூர்த்தி சொத்தை பிரித்து தரவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை கதிர்காமம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள். இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் வினோதா (வயது 24). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வினோதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நோய்கொடுமை அதிகமானதால் மனமுடைந்த வினோதா வீட்டின் மாடியில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆதார் தகவல்களை பெற்று ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய கலால்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வருகிறது.

    மதுபான கடைகளையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யலாம் என்ற நிலையில் மது விற்பனை தொடர்பாக தேசிய தகவலியல் மையம் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளது.

    இதற்கு தேவையான ஆதார் தகவல்களை அளிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு கலால்துறை இணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதனால் தமிழகம் போல புதுவையிலும் டோக்கன் முறையில் மது விற்பனை செய்திட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
    விழுப்புரத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கனூர்:

    கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் சமீபத்தில் மதுக்கடைகளை திறக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்திய நாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தமிழகப் பகுதியான விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்களை கடத்தியதாக பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த தீபக் (வயது28), முத்துவேல் (31), வாதானூரை சேர்ந்த கருணைவேல் (37), சிவசக்தி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×