என் மலர்
புதுச்சேரி
வில்லியனூர் அருகே தமிழக பகுதியில் இருந்து மதுபாட்டில் கடத்தி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
அதே வேளையில் தமிழக பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகள் கோர்ட்டு தடைகளுக்கு பிறகு கடந்த 16-ந்தேதி முதல் இயங்கி வருகிறது.
புதுவையில் மதுக்கடைகள் திறப்பது குறித்து தினம் தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் திறக்கப்படவில்லை.
தமிழகத்தை போல் மதுபாட்டில்களுக்கு கொரோனா வரி விதிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் புதுவையில் மதுக்கடைகள் திறப்பது காலதாமதமாகிறது.
இதனால் புதுவை மது பிரியர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து மது குடிக்கின்றனர்.
மேலும் சிலர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
அதுபோல் வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் தமிழக பகுதியில் இருந்து மதுப்பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), அகரம் புதுநகரை சேர்ந்த அய்யனார் (35) என்பதும், இவர்கள் 2 பேரும் தமிழக பகுதியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 குவார்ட்டர் பிராந்தி பாட்டில் மற்றும் பீர் பாட்டிலும், இதனை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மதுப்பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை கலால்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி-காரைக்காலுக்கு இடைநில்லா அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுவையில் நேற்று முன்தினம் முதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்கின்றனர்.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பஸ்களை இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களிடம் இதுகுறித்து அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுவையில் இருந்து காரைக்காலுக்கு நேற்று காலை அரசு பஸ் இயக்கப்பட்டது. 57 இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் 33 பயணிகள் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினி தரப்பட்டு கைகளை சுத்தம் செய்யவும் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டது. பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டது. டிரைவர், கண்டக்டர் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்றினர். பயணத்தின் போது சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அவ்வப்போது பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பஸ்சை வழியனுப்பும் நிகழ்ச்சியில் அரசு சாலை போக்குவரத்துக்கழக உதவி மேலாளர்கள் புஷ்பராஜ், சிவானந்தம், குழந்தைவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த பஸ் புதுவையில் இருந்து காரைக்காலுக்கு தினமும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. காரைக்காலில் இருந்து பகல் 12.30 மணிக்கு பஸ் புறப்பட்டு புதுச்சேரிக்கு வரும். தற்போது புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதால் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு எங்கும் நிற்காத வகையில் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. காரைக் காலில் இதனை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் பன்வால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருபுவனை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
விழுப்புரம் இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் தனது மனைவி குமாரி (வயது 36) என்பவருடன் வில்லியனூர் அருகே பெரியபாபு சமுத்திரத்தில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தங்கி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று குமாரி அதே சூலையில் வேலை பார்க்கும் அஜித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். திருபுவனை அருகே விநாயகம்பட்டு சாராயக்கடை அருகே சென்ற போது அங்கு சாலையில் பள்ளம் இருந்ததால் அஜித் திடீர் பிரேக் போட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து குமாரி தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை, கை, காலில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து குமாரியின் கணவர் துரை வில்லியனூர் போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் சென்னையில் இருந்து திரும்பிய புதுவை மாணவருக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்காலில் ஒருவர், மாகியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையை சேர்ந்த விமான நிலைய ஊழியர் கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜிப்மரில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மாகியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் ஊரடங்கு தளர்வுக்கு பின் புதுவைக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மேட்டுப்பாளையம் அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.
அந்த கடையில் வாலிபர் உதவிகரமாக வேலை செய்துள்ளார். இதனால் வாலிபரின் குடும்பத்தினர், அவர்களின் கடைக்கு வந்தவர்கள் உள்ளிட்டவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அய்யங்குட்டிப்பாளையத்தை போலீசார் ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுவையில் மதுக்கடைகளை திறக்காததால் அரசுக்கு நாளுக்கு ரூ.2½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தொடங்கி மது, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் புதுவையில் மூடிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் மதுபான கடைகளை 19-ந்தேதி முதல் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கவர்னர் கிரண்பேடி அனுமதி தராததால் மதுக்கடைகளை திறக்க இன்று (வியாழக்கிழமை) வரை அனுமதி கிடைக்கவில்லை. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கலால்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இதன்படி மாதத்துக்கு ரூ.75 கோடியும், நாளுக்கு ரூ.2½ கோடியும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அமைச்சரவை முடிவு எடுத்து 2 நாட்கள் ஆகியும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் அரசுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கவர்னர் இன்று அனுமதி அளித்தாலும் நாளையே (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் 3-வது நாளாக இன்றோடு சேர்த்து ரூ.7½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 55 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்னவே ரூ.137½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுக்கு மேலும் கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

புதுச்சேரியில் நேற்று 106.16 டிகிரி வெயில் பதிவானது. மேலும் அனல் காற்றும் வீசியது.
புதுச்சேரி:
இந்த ஆண்டு கோடை காலம் முன்பே புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. பொதுவாக இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கத்திரி வெயில் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கிறது.
நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் நகரப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையில் அணேணம்பன் புயல் காரணமாக புதுவையில் கடந்த சில தினங் கள் முன்பு அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் புதுவையில் நேற்று முன்தினம் வெயில் கொளுத்தியது. அன்றைய தினம் வெயில் 103 டிகிரியாக பதிவானது. அதேபோல் நேற்று அதைவிட அதிகமாக 106.16 டிகிரியாக வெயில் பதிவானது. மேலும் அனல் காற்றும் வீசியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட், தொப்பி, கண்ணாடி உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர். பெண்கள் முகத்தை துணியால் சுத்திக்கொண்டு சென்றனர்.

புதுவை அருகே கணவன், குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
புதுவை லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவை சேர்ந்த சரண்யா (வயது30). இவருக்கும் திருபுவனையை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர், குழந்தைகளை பிரிந்து கடந்த மார்ச் மாதம் தனது தயார் வீட்டிற்கு சரண்யா தனியாக வந்தார்.
இந்தநிலையில் கணவர், குழந்தையை பிரிந்த ஏக்கம் சரண்யாவை வாட்டியது. இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் சரண்யா தற்கொலை செய்து இருப்பதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.

விவசாயிகளிடம் இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று புதுவை, காரைக்கால் விவசாயிகளிடம் இருந்து 20 ஆயிரம் டன் அரசிக்கு தேவையான நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு, இந்திய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்காலில் தென்னங்குடியிலும் இன்று புதன்கிழமை முதல் ஆகஸ்டு 31-ந் தேதிவரை நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
இந்திய உணவு கழகம் வரையறுத்துள்ள விதிகளின்படி, விவசாயிகள் கொண்டு வரும் நெல் இந்த ஆண்டு அறுவடை செய்தவையாகவும், ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
நடப்பு பருவத்தில் அறுவடை செய்தததற்கு ஆதாரமாக, உழவர் உதவியக வேளாண் அதிகாரியின் சான்று சமர்பிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் நெல் தூற்றும் கருவி கொண்டு, விவசாயிகள் தங்கள் செலவில் தூற்றி எடுத்த பின், இந்திய உணவுக்கழகம் சன்ன ரகம் குவிண்டால் ரூ.1,835-க்கும், மோட்டா ரகம் ரூ.1,815க்கும் கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 நாளில் வரவு வைக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகளை ஒன்றிணைக்க, இந்திய உணவு கழகம் மற்றும்வேளாண் துறையின் விரிவாக்க அதிகாரிகள், களப்பணியாளர்கள் இருப்பர்கள்.
விவசாயிகள் அனைவரும் கொள்முதல் நிலையத்திற்கு வரும்போது அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், உழவர் உதவிய வேளாண் அதிகாரியின் நடப்பு பருவ அறுவடைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும்.
அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் கூடுதல் மற்றும் காத்திருத்தலை தவிர்க்க, விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்ய உள்ள நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் முன்பதிவு செய்தல் நல்லது என இந்திய உணவு கழகம் அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சாகுபடியான வாழையை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு வாழையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கோடை காலத்தில் விவசாயிகள் அதிக அளவில் வாழையை பயிரிடுவர்.
வழக்கம் போல் சந்தை புதுகுப்பம், கூடப்பாக்கம், திருக்கனூர், பாகூர், வில்லியனூர், கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்து அறுவடைக்கு காத்திருந்தனர்.
கோடை விடுமுறையை யொட்டி அதிகமாக திருமணம் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறும். திருமண விருந்துக்காக வாழை இலை, வாழை காய், வாழை மரம், வாழைப்பழம் ஆகியற்றை வியாபாரிகள் வாங்கி செல்வர்.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 4-வது முறையாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் வாழையை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு வாழையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சில விவசாயிகள் வேறு வழியின்றி கால்நடைகளுக்கு உணவாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் நிலத்திற்கே உரமாக்கி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே புதுவை அரசு விவசாயிகளை நேரில் சந்தித்து நஷ்டத்தை கணக்கிட வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணம் தெரியாமல் மதுக்கடை திறக்கப்படும் என்று சில மணி நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், மதுக்கடையை திறக்க முட்டுக்கட்டையாக உள்ளவர்களை திட்டி தீர்த்தனர்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் புதுவையில் கள்-சாராயக்கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதால் புதுவையிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று மதுப்பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் மதுபாட்டில்கள் வாங்க தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். 2 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் புதுவை மது பிரியர்கள் மது வாங்க முடியாமல் திண்டாடினர். ஆனாலும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதற்கேற்றார் போல் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மதுக்கடை இன்று, நாளை திறக்கப்படும் என்று ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வெளியிட்டு வந்தார். அதன்படி மதுப்பிரியர்களும் ஆவலாக மதுக்கடைக்கு சென்றனர். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். அவர்கள் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணம் தெரியாமல் எப்படியும் மதுக்கடை திறக்கப்படும் என்று சில மணி நேரம் அங்கே காத்து கிடந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மதுக்கடையை திறக்க முட்டுக்கட்டையாக உள்ளவர்களை திட்டி தீர்த்தனர்.

அபுதாபியில் இருந்து புதுவை திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஏற்கனவே க.குச்சிப்பாளையம் மற்றும் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அவருடைய மனைவி, குழந்தை மற்றும் தனியார் நிறுவன ஊழியருடன் தொடர்புடைய பண்டசோழநல்லூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய 4 பேரும் கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு அரும்பார்த்தபுரம் ஊழியருடன் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த பைனான்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து புதுவை திரும்பிய 4 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதில் தந்தை- மகன் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 2 பேரின் பரிசோதனை முடிவு இன்று மாலை தெரிய வரும். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கவர்னர் கிரண்பேடி மதுபான கடைகளை திறக்கும் கோப்பில் கையெழுத்திடுவாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பாரா? என்பது இன்று தெரியவரும்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24-ந் தேதி முதல் புதுவையில் கள், சாராயம், மதுபான கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது.
3-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஐகோர்ட்டு தலையீட்டால் 9-ந் தேதி மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டை தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
ஆனால், புதுவையில் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்விலும் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இத னால் மதுபிரியர்கள் தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க சென்றனர்.
4-ம் கட்ட ஊரடங்கில் மதுபான கடைகளை திறக்க புதுவை அரசு முடிவு செய்தது. நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. 19-ந் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோப்பை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார். கொரோனா வரி மதுவிற்கு விதிக்காததால் கோப்பை கவர்னர் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது. இதனால் ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் அமைச்சரவை கூடியது.
இந்த கூட்டத்தில் புதுவை, காரைக்காலில் 25 சதவீதமும், மாகியில் 30 சதவீதமும், ஏனாமில் 35 சதவீதமும் அதிகபட்ச விற்பனை விலையில் மதுபானங்களுக்கு கோவிட் (கொரோனா) வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஒரு நாள் கழித்து இன்று (புதன்கிழமை) மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால் இதுதொடர்பான கோப்பு மீண்டும் கவர்னருக்கு நேற்று இரவு 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் இந்த கோப்பு தொடர்பாக நள்ளிரவு வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால் இன்று திறக்கப்படவிருந்த மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. வழக்கமாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில் கவர்னருக்கு சந்தேகம் ஏற்பட்டால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்புவார்கள்.
2-வது முறை அமைச்சரவையில் முடிவெடுத்து கோப்பை கவர்னருக்கு அனுப்பினால் அதற்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்.
அதிலும் கருத்து வேறுபாடு இருந்தால் அந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி விடுவார். இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம்தான் எடுக்கும்.
ஏற்கனவே கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுபான கடைகளை ஏலம் விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் அரசுக்கு வருவாயும் பெருகும் என குறிப்பிட்டிருந்தார். கவர்னர் மதுபான கடைகளை திறக்கும் கோப்பிற்கு கையெழுத்திடுவாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பாரா? என்பது இன்று தெரியவரும்.
கவர்னர் அனுமதி அளிக்கும்பட்சத்தில் அரசாணை வெளியிட வேண்டியிருக்கும். மேலும் சீல் வைக்கப்பட்ட மதுபான கடைகளை கலால் துறையினர் மேற்பார்வையில் அகற்ற வேண்டியிருக்கும்.
இதனால் இன்று மதுபான கடைகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் இல்லை. நாளை முதல் மதுபான கடைகளை திறக்கும் வாய்ப்பு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பை கவர்னர் அனுப்பி விட்டால் மதுபான கடைகளை திறப்பதற்கு மேலும் காலதாமதமாகும்.