search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    மதுக்கடைகளை திறக்காததால் அரசுக்கு நாளுக்கு ரூ.2½ கோடி வருவாய் இழப்பு

    புதுவையில் மதுக்கடைகளை திறக்காததால் அரசுக்கு நாளுக்கு ரூ.2½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தொடங்கி மது, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் புதுவையில் மூடிக்கிடக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் மதுபான கடைகளை 19-ந்தேதி முதல் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி அனுமதி தராததால் மதுக்கடைகளை திறக்க இன்று (வியாழக்கிழமை) வரை அனுமதி கிடைக்கவில்லை. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கலால்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

    இதன்படி மாதத்துக்கு ரூ.75 கோடியும், நாளுக்கு ரூ.2½ கோடியும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அமைச்சரவை முடிவு எடுத்து 2 நாட்கள் ஆகியும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

    இதனால் அரசுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கவர்னர் இன்று அனுமதி அளித்தாலும் நாளையே (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் 3-வது நாளாக இன்றோடு சேர்த்து ரூ.7½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 55 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்னவே ரூ.137½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த வருவாய் இழப்பு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுக்கு மேலும் கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

    Next Story
    ×