search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூ. கட்சி
    X
    இந்திய கம்யூ. கட்சி

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூ. 10 மையங்களில் ஆர்ப்பாட்டம்

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சி சார்பில் 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார திட்டங்கள், தொழிலாளர் நலச்சட்ட திருத்தம் ஆகியவற்றை எதிர்த்தும், ஊரக வேலை உறுதி திட்டம், மக்களின் வாழ்க்கை செலவிற்கு உதவித்தொகை, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுவை மாநிலத்தில் 10 இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக இடை வெளியை பின்பற்றி முககவசம் அணிந்து நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் வ.சுப்பையா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, சரளா, கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நவீன் தனராமன் மற்றும் தொகுதி செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    புதுவையில் அண்ணா நகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலு வலகம், உழவர்சந்தை, வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருபுவனை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், மண்ணாடிப்பட்டு, ஏம்பலம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய 8 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு உரிய நிதி, கொரோனா நிதி வழங்க வேண்டும், மாநில அரசு ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×