என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
    • தற்போது 61 இடங்களில் போட்டியிட்டு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

    பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. நேரம் செல்லசெல்ல இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அனைத்து தொதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை லாலுவின் இந்த கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    • மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    243 தொகுதிகளுக்கு நடைபெற்ற பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகின.

    இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

    இந்த வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

    இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .

    உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும். நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்ககளின் பட்டியலில் பீகார் இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
    • சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆர்ஜேடியின் லாலு பிரசாத் உடைய மூத்த மகனும் தேஜஸ்வியின் சகோதரனுமான தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளார்.

    ஏற்கனவே திருமணமான தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில், இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக கூறி அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.

    இதையடுத்து அவரை ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு பிரசாத் நீக்கினார். இதை தொடர்ந்து ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் பீகார் தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

    அந்த தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்ஜேடியின் முகேஷ் ரோஷன் 42,644 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.  

    • 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
    • தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

    பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.

    கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

    மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
    • பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

    பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    இந்த வெற்றியால் நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.

    இதில் அமித் ஷா, ஜே.பி நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்வில் பேசிய மோடி, "நாம் மக்களின் சேவகர்கள். நாம் நம் கடின உழைப்பால் மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் மக்களின் இதயங்களை நாம் திருடி விட்டோம். அதனால்தான் ஒட்டுமொத்த பீகாரும் மீண்டும் ஒருமுறை என்டிஏ அரசை தேர்ந்தெடுத்துள்ளது.

    நான் பீகார் தேர்தல்களில் காட்டு ராஜ்ஜியம் மற்றும் அராஜக ஆட்சி பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸின் மனதை நோகடித்தது.

    இன்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், 'காட்டு ராஜ்ஜியம்' ஒருபோதும் பீகாருக்குத் திரும்பி வராது. பீகார் மக்கள் விக்சித் (வளர்ந்த) பீகாருக்காக வாக்களித்துள்ளனர்.

    பீகாரில் சில கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் முஸ்லீம் - யாதவ் பார்முலா ஒன்றை உருவாக்கியிருந்தன. ஆனால், இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான மஹிளா(பெண்கள்) மற்றும் இளைஞர்கள் பார்முலாவை உறுதி செய்துள்ளது.

    இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

    இதில் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்கள் அடங்குவர். அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய கனவுகள், காட்டு ராஜ்யம்  செய்தவர்களின் பழைய வகுப்புவாத முஸ்லீம் - யாதவ் பார்முலாவை முழுவதுமாகத் தகர்த்துவிட்டன.

    மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபடா பகுதி மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

    இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கான வெற்றி இது. இந்தத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    நான் தேர்தல் ஆணையம், நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பீகார் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது.

    பீகார் தேர்தல்கள் மற்றொரு விஷயத்தையும் நிரூபித்துள்ளன. இப்போது, நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்.

    இன்றைய வெற்றி ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். பீகார் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்கள் தோள்களில் இன்னும் பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளது.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகார் அதிவேகத்தில் முன்னேறும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    பீகாரில் புதிய தொழில்கள் நிறுவப்படும். பீகார் இளைஞர்கள் பீகாருக்குள்ளேயே வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைப்போம். பீகாருக்கு முதலீடுகள் வரும். இந்த முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும்.

    பீகாரில் சுற்றுலாத் துறை விரிவடையும். பீகாரின் புதிய ஆற்றலை உலகம் காணும். நமது புனித யாத்திரை ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நமது வரலாற்று பாரம்பரியங்கள் புத்துயிர் பெறும்.

    இன்று நான் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகத்திலிருந்தும் வரும் முதலீட்டாளர்களுக்குச் சொல்கிறேன், பீகார் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது.

    நாடு முழுவதிலும் மற்றும் உலகத்திலும் வாழும் பீகாரைச் சேர்ந்த பிள்ளைகளிடம் நான் சொல்கிறேன், பீகாரில் முதலீடு செய்வதற்கு இதுவே மிகவும் பொருத்தமான நேரம்" என்று தெரிவித்துள்ளார். 

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.
    • 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

    ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.

    முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

    அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.        

    • பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
    • ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

    ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் ஆணையை நாம் ஏற்க வேண்டும். பின்னடைவுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

    நான் பீகாருக்கு செல்லவில்லை. யார் வாக்களிக்கவில்லை, ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது என்று எனக்குத் தெரியாது. நான் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன்" என்று தெரிவித்தார்.

    பீகார் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, சித்தராமையா, "அவர்கள் இங்கேயும் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.   

    • 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியை கண்டது கிடையாது.
    • முதன்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு மாவட்டங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. அதன்வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாகும். இங்கு 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியே கண்டதில்லை. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
    • ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

    ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

    இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

    மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.

    ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

    CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    • நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
    • பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
    • பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர்.

    பீகார் தேர்தலில் 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில் நிதிஷ்குமாரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல்வர் நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    • மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
    • விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

    ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

    அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

    பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ×