என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பெண்ணிடம் முதல்-அமைச்சர் பணம் கொடுப்பதை டிவியில் பார்த்தேன். அதை பற்றி கேட்க தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது.

    தேனியில் ரூ.2 ஆயிரம் கொடுத்ததை பார்த்தோம். இதுவும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எங்கள் மீது எவ்வித நேரடி குற்றசாட்டும் இல்லாமல், எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒரு சதி.

    தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.



    நாங்கள் வெற்றி பெற்றால் மோடி அரசும் போய்விடும். எடப்பாடி அரசும் போய்விடும். அ.தி.மு.க. மீதான குற்றசாட்டுகள் குறித்து மற்ற நடவடிக்கைகளை பிறகு பார்த்து கொள்ளலாம். வழக்கறிஞர்களிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Loksabhaelections2019 #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand
    இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளரின் பெயரை மாற்றி கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையை ஏற்படுத்தினார். #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

    அதன் பின் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொல்லும் போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏறிட்டு பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    ஆண்டிப்பட்டியில் நடந்த சோதனையின்போது சிக்கிய ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    “அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக நாங்கள் தான் தகவல் தந்தோம். ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம்சாட்டுகிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்” எனவும் வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids

    ஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அமமுகவைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினரும் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில், வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



    வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர் அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். வருமான வரித்துறையினரை தடுத்த புகாரில் அமமுகவின் பேரூராட்சி செயலாளர் பொன்முருகன் கைது செய்யப்பட்டார். #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். #MKStalin #Election2019
    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

    ‘யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் நான்கு முறை வானத்தை நோக்கி சுட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

    இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இரவு கனிமொழி வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அதே மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டசபையில் தொகுதிகளில் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Amburbypoll #Gudiyattambypoll #TNbypolls
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அதே மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டசபையில் தொகுதிகளில் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அறிவித்தது.



    அதேவேளையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். #Amburbypoll #Gudiyattambypoll #TNbypolls
    பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.  

    வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.



    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி இருந்தது. கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்பிதல் அளித்தார்.

    இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகம் - புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி, டி.டி.வி.தினகரன் கட்சி, சீமான் கட்சிகளிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

    கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கினர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் அ.தி.மு.க- பா.ஜனதா, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மட்டும் நேற்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



    தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.



    பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக 6 முறை தமிழகம் வந்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

    இப்படி அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தாலும் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    சுமார் ஒரு மாதமாக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். இந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

    நாளை (17-ந்தேதி) எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.

    நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற இலக்கை எட்டுவோம் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தவுடன் தொகுதிகளில் தங்கியுள்ள வெளி ஆட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இதை மீறி தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

    ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 160 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 100 பேர் வரை இருப்பார்கள். இதன்மூலம் 16 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசாரும், 20 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். #LoksabhaElections2019 #pollcampaign #pollcampaignends #campaignendsinTN
    பெட்டிப் பெட்டியாக பணம் பறிமுதல் மற்றும் ஆரத்திக்கு பணம் தந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #Kanimozhi #KathirAnand
    சென்னை:

    ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
     
    தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே, அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு இம்மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டது. #MadrasHC #MadrasHCdismissed #baningcandidature #Kanimozhi #KathirAnand #LSpolls
    சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாட்னா சாகெப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். #ShatrughanSinha #PoonamSinhajoins #PoonamjoinsSP #SamajwadiParty
    லக்னோ:

    80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    இந்நிலையில், இன்று காலை பாஜக தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.

    அனைத்து கட்சிகளின் சார்பிலும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.



    பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், லக்னோ நகரில் உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் சிங் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலையில் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    விரைவில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக பூனம் சின்கா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ShatrughanSinha #PoonamSinhajoins  #PoonamjoinsSP #SamajwadiParty 
    ×