என் மலர்
விருதுநகர்
- அனுமதியின்றி வைத்திருந்ததாக ரூ.20 லட்சம் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
- சின்னகாமன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமம் ஆர்.எஸ்.ஆர். நகரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறு வனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 526 பெட்டிகளில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சின்னகாமன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து, பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.
- 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.
- தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
- தேவர் குருபூஜை விழாவையொட்டி ேகாவா முதல்வர் கலந்துகொண்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முத்து ராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலை வர் அண்ணாமலை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது நினைவி டத்தில் அமைந்துள்ள தேவ ரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே யுள்ள தும்மு சின்னம்பட்டி பகுதியி லுள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தினர்.
மேலும் தேவர் குருபூஜை விழாவினையொட்டி நடை பெற்ற இந்த அன்ன தான விருந்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வா கிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர்.
- மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
- விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதைப்பந்து தூவுதல் திட்ட தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப் குமார் முன்னிலை வகித் தார். கலெக்டர் ஜெயசீலன் விதைப்பந்து தூவும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு பசுமையாக்கள் திட்டம் மாநிலம் முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து விதைப்பந்து தூவுதல் எனும் சிறப்பு திட்டம் மூலம் தமிழ்நாடு பசுமையாக்கள் இயக்கத்தின் நோக்கத்தினை செயல் படுத்த திட்டமிடப்பட்டுள் ளது.
மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்த வும், சுற்றுச்சூழலை பாது காப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதைப் பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப் பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரை யோரங்கள் மற்றும் புறம் போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் எதிர் காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தா லும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலோடு மற்றவர்க ளுக்கு எடுத்து கூறி விழிப் புணர்வு ஏற்படுத்த வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து விபத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- அதிக வட்டி தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது58). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வாழவந்தான் (35), அவரது மனைவி பவித்ரா (25), உறவினர் திருப்பதி (22).
இவர்கள் மூவரும் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கதிரவனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் கதிரவன் விருப்ப மின்றி இருந்துள்ளார்.
பழக்கத்தின் அடிப்ப டையில் பலமுறை வற்பு றுத்தியதால் 5 தவணைகளில் ரூ.11 1/2 லட்சத்தை அந்த நிதி நிறுவனத்தில் கதிரவன் முதலீடு செய்தார்.3 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைத்தது. அதன்பின்னர் வட்டி வரவில்லை.
இதையடுத்து சந்தேக மடைந்த கதிரவன் அந்த நிறுவனம் குறித்து விசா ரித்தார். அதில் குறிப்பிட்ட முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருப்பி தருமாறு வாழவந்தானிடம் கதிரவன் வலியுறுத்தினார்.
அப்போது பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் வாழவந்தான் உள்பட 3 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால்பண்ணை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு முக்குளம் அருகே கூட்டுறவு பால் பண்ணை உள்ளது. இங்கு ஏராளமான ஊழி யர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த சேவுகன் (வயது57) என்பவரும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளும்படி கேட்பதற்காக பால் பண்ணைக்கு சேவுகன் சென்றார். அப்போது உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வேலையில் சேரும் படி சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி மேலாளரை சந்திப்பதற்காக சேவுகன் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பால் பண்ணை முன்பு சேவுகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லி புத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சேவுகனின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவுகனின் மகன் தங்க திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் மேலாளர் சிவனான், ஊழியர்கள் ராம்குமார், நாராயணன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்கமாக மாற்றி சிவனான் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்திற்கு வெளிமாநில மாணவர்கள் வருகிறார்கள்.
- மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ் ணன்கோவில் வி.பி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா வுக்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார். தாளாளர் பழனிசெல்வி சங்கர் முன் னிலை வகித்தார்.
மாணவிகளுக்கு பட்டம்
கல்லூரி துணைத்தலை வர் தங்க பிரபு, சிந்துஜா தங்கபிரபு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றனர். விழாவில் அன்னை ெதரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந் தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசியதாவது:-
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிக ளுக்கு பட்டம் வழங்குவத மிகவும் பெருமையாக உள் ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
தரமான கல்வி
இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழகத்தில் கல் வியின் தரம் சிறப்பாக உள் ளது. எனவே பல்வேறு மாநி லங்களில் இருந்தும், பல் வேறு நாடுகளில் இருந் தும் இந்த தரமான கல்வியை கற்பதற்காக தமிழகத்தை நோக்கி மாணவ, மாணவி கள் வருகிறார்கள்.
எனவே தரமான கல் வியை ஆசிரியர்கள் மாண–வர்களுக்கு போதிக்க வேண் டும். கல்வி கற்பதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான, தெளிவான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே மாணவ, மாணவிகள் படிக்கும்போது, நல்ல முைறயில் படிக்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில், கல்லூரி இயக்குனர் நாச்சியார் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து
கொண்டனர்.
- ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாங்கி தருகிறார்.
- புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். தனது சட்டமன்ற ஊதியத்தின் மூலம் கொரோனா நிவாரண நிதி, மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருது நகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஊதியம் மூலம் புத்தாடைகளை வாங்கி தந்து வருகிறார்.
இந்த ஆண்டு 7-வது முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கித் தந்தார். இதற்காக அவர் அந்த குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் விரும்பி தேர்வு செய்த புத்தா டைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது 3 மாத ஊதியமான ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை செலவு செய்து வாங்கி கொடுத்தார்.புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.
ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன் என்றார். ஆதரவற்ற குழந்தை களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.
- சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பகத்தில் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகா லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளது. ஒவ் வொரு மாதம் அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமியை வழிபட அனுமதி வழங்கப்படும்.
ஐப்பசி பவுர்ணமி
அந்த வகையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல் வதற்கு அக்டோபர் 26 முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் வனத்துறை சார் பில் அனுமதி வழங்கப்பட் டது.
பிரதோஷத்தையொட்டி, 259 பேரும், வெள்ளிக்கிழமை 252 பேரும், சதுரகிரி மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சனிக்கி ழமை பவுர்ணமியையொட்டி அதிகாலை முதலே தாணிப் பாறை அடிவாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். காலை 6 மணி தாணிப்பாறை அடி வாரத்தில் உள்ள வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதி பவுர்ணமியையொட்டி சந் தன மகாலிங்கம் சுவா மிக்கு அன்னாபிஷேகம் நடைபெற் றது. இதில் 4,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வா கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சொகுசு காரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசாரை இடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோத னை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.
அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
- புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை மூலம் டி.மானகசேரி கிராமத்தில் தரிசு நிலங்களில் செம்மை நெல் சாகுபடி எந்திரம் மூலம் நடைபெற்று வரும் நடவு பணிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்யப் பட்டுள்ள கரும்புகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குதிரைவாலி விதைகள், ரூ.42 ஆயிரம் மானியத்தில் சுழல் கலப்பையும், ரூ.2,500 மானியத்தில் நெல் விதைக்கும் கருவியையும், ரூ.6 ஆயிரம் மானியத்தில் சோளம் இடு பொருட்கள், பண்ணை கருவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லியில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.அங்கு சேதமடைந்த கட்டி டங்களை புனரமைப் பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.






