என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • செட்டிக்குறிச்சியில் பிரபாகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சி களில் கிராமசபை கூட்டம் நடந்தது. செட்டிக் குறிச்சி யில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகுமலை கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வனஜா வரவேற்றார். பற்றாளராக சமூகநல அலுவலர் திராவிடச்செல்வி, தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சிஅலுவலர் காஜா மைதீன் பந்தேநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அருணா சலபுரம் சமத்துவபுரத்தில் இருந்து செட்டிக்குறிச்சிக்கு பொதுமக்கள் வந்து செல்ல சாலைவசதி வேண்டும் என்றும், மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டால் கிராம உதவியாளர் ஒருமையில் பேசுவதாகவும் பொதுமக்கள், தாசில்தார் அறிவழகனிடம் புகார் தெரிவித்தனர். தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மனை பிரிவு அங்கீகாரம், கட்டிட அனுமதி போன்றவை இணைய வழி மூலம் செலுத்த தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரி விவரங்கள், கைபேசி எண் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக வரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தெரிவித்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் தொடர் திருட்டு சம்பவங்க ளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் கைது செய்து பொதுமக்களிடம் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.

    மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் முதல் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக் கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி உள்ளார். அந்த நகைகளை தனியார் வங்கி யில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். 6 மாதங்கள் கடந்த பின்னரும் ராம்குமார் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ராம்குமார் கோர்ட் டில் ஆஜராகி முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியதுபோல் பணம், நகைகளை தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் கிளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக அணுமின் உற்பத்தி நிலையத்தில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் இயக்குனர் விக்னேஸ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனிராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணுமின் நிலையம் கூடுதல் முதன்மை பொறியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அணு மின் நிலையங்களில் முக்கியத்துவம், அணு மின் நிலையங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், கேட் தேர்வின் முக்கியத்துவம் முதலான தகவல்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மின்னணு தொடர்பு மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார். இணை பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.

    • கூலித்தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள உலக் குடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மதுரை சிலைமான் பகுதி யில் இயங்கி வரும் தனியா ருக்கு சொந்தமான பந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் கள். தினமும் கம்பெ னிக்கு சொந்தமான வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் உலக்குடி யில் இருந்து நேற்று காலை வேலைக்கு சென்ற உமா, முத்துமாரி, அனிதா, மல் லிகா, தமிழரசி, செல்வி, முருகேஸ்வரி மற்றும் பாண் டீஸ்வரி உள்பட 12 பேரும் வழக்கம் போல இரவு வேலைக்கு சென்று விட்டு வேனில் இன்று அதிகாலை யில் வீடு திரும்பி கொண்டி ருந்தனர்.

    அந்த வேனை சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியை சேர்ந்த முத்துப் பாண்டி (23) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 2.45 மணியளவில் சாலை இலுப்பைகுளம் அருகே யுள்ள மாணிக்கனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர் முத்துப் பாண்டி மற்றும் தொழிலா–ளர்கள் உள்பட வேனில் பய ணம் செய்த 13 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் உலக்குடி பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பவருக்கு கால் முறிந்தது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத் திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் படு காயமடைந்த அனைவரை யும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை

    (2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    • விஜயகரிசல்குளம் ஆய்வில் 5 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • வைப்பாற்றங்கரையில் சிறந்த நாகரீகம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜ பாளையம், ராஜீக்கள் கல்லூரி (முதுகலை மற்றும் வராலாற்று ஆய்வு மையம்) இணைந்து "வைப்பாற்றங் கரையின் வரலாற்றுத் தடம்" என்ற தலைப்பில் நடைபெற்ற, மாநில அளவி லான தொல்லியல் மற்றும் வரலாற்றுக் கருத்தரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சியை நடத்தினர்.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், ராஜ பாளையம் நகர் மன்றத்தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    நம்முடைய வரலாறு என்பது காவிரிக்கரையில் இருந்து எழுதிட வேண்டும் என்பதன் உண்மையான கோட்பாட்டின் அடிப்படை யில்தான், தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளில் மிகபெரிய முன்னெடுப்பு கள் முதல்-அமைச்சர் தலைமையில் எடுத்து வருகிறோம்.

    தாமிரபரணி ஆற்றங் கரையில் கொற்கை, ஆதிச்ச நல்லூர், சிவகளை என்று பல இடங்களில் ஆய்வுகளை நடத்தி, நம் வரலாற்று னுடைய காலம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை ஆய்வுகளின் முடிவில் தீர்மானித்தோம். அந்த வரிசையில், நம்முடைய விருதுநகர் மாவட்டத்திலே வைப்பாற்றங்கரையிலே ஒரு சிறந்த நாகரீகம் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்பதன் அடிப்படையில், வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    அந்த ஆய்வுகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பொருள்கள் கிடைத்தி ருக்கின்றது என்று சொன் னால் நாம் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு அற்புதமான சமுதாயம் வைப்பாற்றங்கரையில் வாழ்ந்திருக்கின்றது. கீழடி உள்ளிட்ட நாகரிகங்களுக்கு குறையாத நாகரீகமாக வைப்பங்காற்றங்கரை நாகரீகம் இருந்துள்ளது.

    கீழடியில் உள்ள உலகத்த ரம் வாய்ந்த அருங்காட்சி யகத்தை போல ஒரு அருங்காட்சியகம் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை சொல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ஒப்புதலு டன் வழங்கி சுமார் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பணிகள் மிக விரை வில் தொடங்க இருக்கிறது.

    இந்த சமுதாயம் என்னவாக இருந்தது என் பதை இன்றைய சமுதாயம் தெரிந்து கொண்டால் தான், நாளை என்னவாக இருக்க வேண்டும் எப்படிப்பட்ட வர்களாக உருவாக வேண் டும், எதிர்காலம் நமக்கு என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய சமுதாயமாக மாண வர்கள் உருவாக முடியும். அந்த உணர்வினை மாண வர்கள் பெறக் கூடிய வகையில் இந்த கண்காட்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • மது பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திரும்ப பெரும் அரசு தி.மு.க. அரசு.
    • ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன் விழா மைதானத்தில் அ.தி. மு.க. பொதுசெயலாள ரும், முன்னாள் முதலமைச்சரு மான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கு இணங்க விருது நகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராஜபாளை யம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான ராஜேந்திரன், தலை மைக்கழக பேச்சாளர் பேரா வூரணி திலீபன் பேசினர். இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி யதாவது:-

    ராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதிகள், தற்போது நடைபெற்று வருகின்ற நான்கு வழிச்சாலை உள் ளிட்ட அனைத்து பணிகளுக் கும் நான் தான் அடிக்கல் நாட்டினேன். தற்போது இவர்கள் பார்வையிட்டு கமிஷன் மட்டும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பாட்டு பாடி பெயர் வாங்க வேண்டும். இவர்கள் குற்றம் கண்டு பேர் வாங்கிட நினைக்கிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத் தில் ஏழை, எளிய மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. அரசால் வழங்கப்படும் மகளிர் உரி மைத்தொகை என்ற பெய ரில் 40 சதவீதம் பேருக்கு தான் பணம் வழங்கப் பட்டு வருகிறது. அதிலும் பிரச் சினை ஏற்பட்டுள்ளது.

    ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு மதுபானத்திற்கு 30 ரூபாய் விலை ஏற்றியுள்ள னர். இதனால் ஆண்கள் குடிப்பதற்கு வழி செய்து விட்டு நயவஞ்சகமாக அதில் ஐந்து மடங்கு வருவாயை தி.மு.க. அரசு ஈட்டி வருகி றது. மின் கட்டண உயர்வால் ராஜபாளையத்தில் பல நூற் பாலைகள் மூடப்பட்டு வரு கின்றன.இந்த நிலை மாற வேண் டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். யார் பிரதமர் என எடப்பாடி தீர்மானிக்க வேண்டும், இல்லை எடப்பாடி பிரதம ராக வேண்டும்.

    இவ்வாறு அவர் ேபசி னார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செய லாளர் எஸ்.என்.பாபுராஜ், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலா ளர்கள் ஆர்.எம்.குருசாமி (வடக்கு), நவரத்தினம் (தெற்கு), மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கெளரவ தலைவர் குருசாமி,

    மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகா புரியான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செய லாளர்கள் சோலைமலை, யோகசேகரன் நன்றி கூறினர். கூட்ட ஏற்பாடு களை ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.

    • ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது44). இவர் குடும்பத்து டன் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். இதன் காரணமாக கிழவிக்கு ளத்தில் உள்ள வீடு பெரும் பாலான நேரம் பூட்டியே கிடக்கும்.

    ஆயுத பூஜைக்கு கிழவிக் குளத்திற்கு சென்ற கடற்கரை அங்கு பூஜை செய்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து விட்டார். வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் நேற்று கிழவிக்குளம் சென்ற கடற்கரை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இன்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
    • ஆணைக்குட்டம் அணையை பார்வையிட்டனர்.

    விருதுநகர்

    சட்டமன்ற மதிப்பீட்டுக்கு ழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விபரங்களை கேட்டும், பணிகளை விரைவுப்ப–டுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் விருது நகர் மாவட்டத்தில் இன்று கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் பல் வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த கள்ளக் குறிச்சி எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், மதுரை வடக்கு எம்.எல்.ஏ. கோ.தளபதி, கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ. புதூர் பூமிநாதன் ஆகியோர் முதலாவதாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது நோயாளிகளின் வருகை, அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரம் குறித்து ஆய்வு செய்து, உள்நோயாளிகளிடம் குறைகளை கேட்ட றிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட குழுவினர் நகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, கன்னிசேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட னர்.

    இதையடுத்து ஆணைக் குட்டம் அணைக்கட்டுக்கு சென்ற குழுவினர் தண்ணீர் இருப்பு, வரத்து, அதன் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களின் விபரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளி டம் கேட்டறிந்தனர். இந்த குழுவினருடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சென்றனர்.

    பிற்பகல் 3 மணிக்கு மேல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

    • சிவகாசி தண்ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள் ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சத்தியபிரியன் (வயது 17).

    இவர் சிவகாசியில் இயங்கி வரும் தனியார் தண் ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் தனது பெற்றோரிடம் கூறி விட்டு வேலைக்கு சென்ற சத்தியபிரியன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு லாரியில் தண்ணீர் சப்ளை செய்வதற் காக சென்றார். மீண்டும் திரும்பிய நிலையில் திடீரென்று மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அங்கிருந்த–வர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வெயிலப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி சிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரை வரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×