search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. விளம்பர அரசியல் செய்கிறது-எம்.பி. குற்றச்சாட்டு
    X

    விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி.குறைகளை கேட்டறிந்தார்.

    பா.ஜ.க. விளம்பர அரசியல் செய்கிறது-எம்.பி. குற்றச்சாட்டு

    • கொடிக்கம்ப பிரச்சினையில் பா.ஜ.க. விளம்பர அரசியல் செய்கிறது.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

    விருதுநகர்

    பிரதமர் மோடியும். அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள் என மாணிக்கம்தா கூர் எம்.பி.குற்றம் சாட்டினார்.

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    பிரதமர்மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள், யாரெல்லாம் பிரதமர் மோடிக்கும் அதா னிக்குமான தொடர்பு பற்றி பேசுகிறார்களோ அவர்க ளது செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டு முன்பு இருந்த கொடி அகற்றப் பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவ தும் கொடி கம்பம் நடுவதற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

    எனவே போலீசார் கொடிக்கம்பம் நடுவதாக பிரச்சினை ஏற்படுத்தும் பா.ஜனதா வினர் மீது நடவடிக்கை எடுக்க கடும் வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2500 கோடி ஊதிய நிலுவை வர வேண்டிய நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பா.ஜனதா மாநில தலைமை கொடிக்கம்பம் நடும் பிரச்சினையை பெரிதாக்குவது விளம்பர அர சியலாகும்.

    தேசிய அளவில் சாதி வேறுபாடு ஒரு பிரச்சினையாகவே உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது குறித்து சமூக நீதிக் காக செயல்படும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவகுருநாதன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து ரோசல்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டறிந்தார்.

    இதில் பஞ்சாயத்து தலைவர் சிவஞானபுரம், கிருஷ்ணமூர்த்தி, ரோசல்பட்டி தமிழரசி ஜெயமுருகன் வட்டார வளர்ச்சி அதிகாரி கற்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருதுநகரை சேர்ந்த புஷ்பம் சதாசிவம், மதுரையை சேர்ந்த சஹானா பாஸ்கர், திருமங்கலத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர்மோடி நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிதிஉதவி பெற்ற குடும்பத்தினர் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×