search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்
    X

    32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்

    • அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • செட்டிக்குறிச்சியில் பிரபாகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சி களில் கிராமசபை கூட்டம் நடந்தது. செட்டிக் குறிச்சி யில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகுமலை கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வனஜா வரவேற்றார். பற்றாளராக சமூகநல அலுவலர் திராவிடச்செல்வி, தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சிஅலுவலர் காஜா மைதீன் பந்தேநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அருணா சலபுரம் சமத்துவபுரத்தில் இருந்து செட்டிக்குறிச்சிக்கு பொதுமக்கள் வந்து செல்ல சாலைவசதி வேண்டும் என்றும், மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டால் கிராம உதவியாளர் ஒருமையில் பேசுவதாகவும் பொதுமக்கள், தாசில்தார் அறிவழகனிடம் புகார் தெரிவித்தனர். தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மனை பிரிவு அங்கீகாரம், கட்டிட அனுமதி போன்றவை இணைய வழி மூலம் செலுத்த தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வரி விவரங்கள், கைபேசி எண் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக வரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கே.வி.கே.ஆர். பிரபாகரன் தெரிவித்தார்.

    Next Story
    ×