என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகர் பகுதி அவைத்தலைவராக கணேசன், செயலாளராக மணி, பொருளாளராக பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    ராஜபாளையம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சைக்கனி, செயலாளராக மணிகண்ட ராஜா, பொரு ளாளராக செந்தில்குமார் ஆகியோரும், ராஜபாளையம் தெற்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சை, செயலாளராக ராமமூர்த்தி, பொருளாளராக புதிய ராஜ் ஆகியோர் நியமிக்க ப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அவைத் தலைவராக பலராமன், செயலாளராக முனீஸ்வரன், பொருளாளராக பாலமுருகனும், சாத்தூர் அவைத்தலைவராக நாச்சியப்பன், செயலாளராக குருசாமி, பொருளாளராக நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விருதுநகர் நகர் அவை த்தலைவராக காசிராஜன், செயலாளராக தனபாலன், பொருளாளராக துளசி ராம் ஆகிய நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர்.

    • இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வம் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் பார்வதி கொடுத்த புகாரின்படி கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அக்சயா (வயது 22). இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி யதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த அக்சயா சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பெற்றோரை தொடர்பு கொண்ட அக்சயா தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தேட வேண்டாம் எனவும் தெரி வித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் புளியங்குள த்தை சேர்ந்தவர் கோபால் சாமி (65). சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி விட்டு சென்ற இவர் அதன்பின் ஊர் திரும்ப வில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.

    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலராஜகுல ராமன், சோழபுரம், குறிச்சியா ர்பட்டி, கிருஷ்ணாபுரம், சோலைசேரி, அயன்கொல்ல ங்கொ ண்டான், நக்கனேரி, சுந்தரநாச்சியார்புரம், வடக்கு தேவதானம் ,மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன்புத்தூர், மீனாட்சிபுரம் ஆகியவை ஆகும். வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் இந்த பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளன, இந்த கிராமங்களில் தரிசு நிலங்களை சீர் செய்ய, சொட்டுநீர் பாசனம் அமைக்க போன்றவற்றுக்கு அரசு மானியம் தருகிறது.

    மேலும் 8-க்கும் மே ருக்கு மேல் சீர்த்திருத்தம் செய்யும் போது அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் போன்றவைகளும் மானிய விலையில் கிடைக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் விவரத்தை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி தெரிவித்தார்.

    • வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.
    • சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடந்தது. இதையொட்டி கடந்த 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தந்தனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ததால் பக்தர்கள் அடிவாரம் இறங்கும்போது கடும் சிரமம் அடைந்தனர். கடந்த 28-ந் தேதி இரவு நேரத்தில் பெய்த மழையால் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பாதைகளில் சிக்கினர். காட்டாற்று ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தீயணைப்பு வீரர்கள் வனத் துறையினரால் பக்தர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

    சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர் காலை 7 மணிக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் வருகை கணிசமான அளவில் இருந்தது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் நேற்று மாலையில் மலை அடிவாரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது. இதன் காரணமாக மாங்கனி ஓடை, சங்கிலி பாறை பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுஇரவில் தவித்தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களும் மழை நின்றபின் டார்ச்லைட் வெளிச்சத்தில் பக்தர்களை பத்திரமாக மீட்டு அடிவாரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆடி அமாவாசை முன்னிட்டு 25-ந் தேதி முதல் நேற்று நேற்று வரை 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சதுரகிரி மலை பாதை மூடப்பட்டது.

    • வெற்றி பெற்ற பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி உள்பட பலர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ''பாரதி இளங்கவிஞர் விருது'' க்கான கவிதை போட்டி நடந்தது. இதில் 25 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிக்கான தலைப்பு மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. ''நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'' என்ற தலைப்பில் 50 வரிகளுக்கு மிகாமல் மாணவர்கள் கவிதை எழுதினர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கிஷோர் தமிழ்த்துறை சார்பில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்றார். அவர் தனது கவிதையில் பஞ்சம், லஞ்சம், இயற்கை சீரழிவு போன்ற சமூக சாடல்கள் இடம் பெற்றன.

    இவரை பாராட்டி பி.எஸ்.ஆர். கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுரேஷ் பரிசு வழங்கினார். பரிசு பெற்ற மாணவர் கிஷோரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சிமன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டிகளுக்கு, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை ஜான்சி ராணி, ந.சுப்பையாபு ரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராஜசேகர். வெள்ளையா புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.

    விருதுநகர் முதன்மைக்கல்வி அலு வலகத்தின் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பா ளர் தங்க மாரியப்பன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

    பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டியில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைதேகி இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி, 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வென்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசாக வழங்கப்ப டும். ரூ.2ஆயிரத்தை ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாரீஸ்வரி, மேலப்பருத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கான பரிசுத்தொகைகள் பிறிதொரு நாளில் கலெக்டர் முன்னிலையில் வழங்கப்பெறும் என விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி த்துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி விஸ்வநத்தம காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த காளிராஜ் சம்ப வத்தன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவருக்கு கடந்த சில மாதங்களாக கை வலி இருந்தது. இதனால் அவ ரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் ஏற்பட்ட விரக்தியில் தங்க ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    • நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயதுடைய மாணவி நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவியின் தோழிகள் செல்போனில் தொடர்பு கொண்டபோது தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுல்தான் அலாவுதீன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஜக்கம்மாள்புரம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 22 வயது மகள் சம்பவத்தன்று மாயமானார்.

    இவர் ராயகிரி ஆவுடையா புரத்தை சேர்ந்த குமார் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மகள் மாயமானது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீண்டும் மாயம்

    சிவகாசி டி.கான்சா புரத்தை சேர்ந்தவர் மாணவி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு செல்போன் மூலம் தேனி சின்னமனூரை சேர்ந்த பிரதீப் என்பவர் பழக்க மானார்.

    நாளடைவில் இவர்க ளுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சம்பவத்தன்று மாயானார். உடனே அவரது தந்தை தேனிக்கு சென்று போலீஸ் உதவியுடன் தனது மகளை மீட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவி மீண்டும் மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் இளம்பெண்

    ராஜபாளையம் தொம்ப குளத்தை சேர்ந்தவர் பெரு மாள். இவரது மகள் நிகிதா தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது மகனுடன் நிகிதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கீழராஜகுலராமன் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த பரிதாப சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சந்தன கருப்பசாமி (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சந்தனகருப்பசாமி தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்தன கருப்பசாமி மன வருத்தத்துடன் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சந்தன கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து மாணவர்கள் செல்கின்றனர்.
    • இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செம்பட்டையங்கால் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்கள் பஸ் ஏறுவதற்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது 2 கிலோமீட்டர் தூரம் தினமும் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு எம். புதுப்பட்டி, கோவிந்தநல்லூர், நத்தம்பட்டி, மூவரைவென்றான், கல்லுப்பட்டி செல்லும் டவுன் பஸ்கள் செம்பட்டையங்கால் ஊருக்குள் வந்து மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.

    இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள். இதனை அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.187.94லட்சம் மதிப்பீட்டில் நூலகம்-அறிவு சார் மையம் அமைய உள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக் குமார், மேலாளர் சங்கர் கணேஷ், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, முன்னாள் நகர் மன்ற தலைவரும் கவுன்சிலருமான சிவப்பிரகாசம் மற்றும் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.187.94 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி 1-வது தெருவில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் கட்டப்பட உள்ளது

    சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானம் புதுப்பிக்கப்பட உள்ளது. புளியம்பட்டி மேற்கு பகுதியில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது. சின்ன புளியம்பட்டி காந்தி மைதானத்தில் மினி மார்க்கெட் ஏற்படுத்தவும், நகரில் 8 கிலோ மீட்டருக்கு மண் சாலைகளை மாற்றி தார்சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதார கேடாக இருந்தால் உடனுக்குடன் தூய்மை செய்ய வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி முதல் ''மொபைல் கிளினிக் டீம்'' அமைக்கப்பட உள்ளது. 36 வார்டுகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.26-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் பேசுகையில், எனது வார்டுகளில் 10 தெருக்கள் உள்ளன. 10 தெருக்களிலும் இருந்து கழிவு நீர் சரியாக வெளியே செல்வதில்லை. இதனால் தெருப்பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றார்.

    இதற்கு தலைவர் சுந்தர லட்சுமி பதிலளிக்கையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 1-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி, 7 வது வார்டில் கவுன்சிலர் கோகுல் ஆகியோர் தங்கள் வார்டுகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தியது

    • ராஜபாளையத்தில் சமூக சேவகருக்கு விருது வழங்கப்பட்டது.
    • விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பிரபல மருத்துவர் சாந்திலால் மறைந்து 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது. டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார்.

    எழுத்தாளர் கவிபாலா வரவேற்றார். டாக்டர் சாந்திலால் எழுதிய ''வானவில் கனவுகளோடு நாமும்'' என்ற நூலை அவரது மகள் சுப்ரியா சாந்திலால் மற்றும் மருமகன் தினேஷ் பாபு வெளியிட முதல் பிரதியை டாக்டர் கணேசன் பெற்றுக்கொண்டார். டாக்டர்கள் அறம், ராதா, கவிஞர் ஆனந்தி ஆகியோரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது. மருத்துவர் ராஜாராம், கவிஞர் நித்தியா, மனிதி அமைப்பாளர் செல்வி, கவிஞர் ரமணி, எழுத்தாளர் விஜய ராணி ஆகியோர் பேசினர்.

    பகிர்வு அறக்கட்டளை சரவணன் நன்றி கூறினார். பொருளாளர் பொன் லட்சுமி ஒருங்கிணைத்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய மருத்துவர் சங்கம், சுந்தரி சாந்திலால் நூலகம் மற்றும் பகிர்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.

    ×