search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்
    X

    பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து மாணவர்கள் செல்கின்றனர்.
    • இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செம்பட்டையங்கால் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்கள் பஸ் ஏறுவதற்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது 2 கிலோமீட்டர் தூரம் தினமும் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு எம். புதுப்பட்டி, கோவிந்தநல்லூர், நத்தம்பட்டி, மூவரைவென்றான், கல்லுப்பட்டி செல்லும் டவுன் பஸ்கள் செம்பட்டையங்கால் ஊருக்குள் வந்து மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.

    இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள். இதனை அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×