

ராஜபாளையம்
ராஜபாளையத்தில் பிரபல மருத்துவர் சாந்திலால் மறைந்து 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் நடந்தது. டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார்.
எழுத்தாளர் கவிபாலா வரவேற்றார். டாக்டர் சாந்திலால் எழுதிய ''வானவில் கனவுகளோடு நாமும்'' என்ற நூலை அவரது மகள் சுப்ரியா சாந்திலால் மற்றும் மருமகன் தினேஷ் பாபு வெளியிட முதல் பிரதியை டாக்டர் கணேசன் பெற்றுக்கொண்டார். டாக்டர்கள் அறம், ராதா, கவிஞர் ஆனந்தி ஆகியோரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் சமூகசேவகர் துரைராஜூக்கு விருது வழங்கப்பட்டது. மருத்துவர் ராஜாராம், கவிஞர் நித்தியா, மனிதி அமைப்பாளர் செல்வி, கவிஞர் ரமணி, எழுத்தாளர் விஜய ராணி ஆகியோர் பேசினர்.
பகிர்வு அறக்கட்டளை சரவணன் நன்றி கூறினார். பொருளாளர் பொன் லட்சுமி ஒருங்கிணைத்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய மருத்துவர் சங்கம், சுந்தரி சாந்திலால் நூலகம் மற்றும் பகிர்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.