என் மலர்
விருதுநகர்
- மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் பெண்கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். மேலும் விரைவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக ணிணியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே மாணவ- மாணவிகள் அனை வரும் கல்வியின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆதி நாராயணன், தலைவர் ராமசாமி, பொருளாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, கிளை செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருணாச்சலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
- விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் அருள்பாலிக்கும் அருணாச லேசுவரர்-உண்ணாமலை அம்மன், ஸ்ரீலஸ்ரீ சாது அருணாச்சல சுவாமிகளுக்கு ஆவணி மூலத் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் கும்ப பூஜை, அபிஷேக பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகை அபிஷேம் அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் அருணாச்சலேசுவரர்- உண்ணாமலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. கார்த்திக்பட்டர் தலைமையில் குழுவினர் திருக்கல்யாண வழிபாடுகள் நடந்தது.
விழாவில் பழைய பாளையம், புதுப்பாளையம் சமூக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தலைவர் காளிமுத்து, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ், துணை தலைவர் பாலமுருகன், துணைச் செயலாளர் ராஜா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சரவணன், கண்ணன், நாகரத்தினவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
- அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவுபடி அருப்புக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இணைந்து நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இ.எஸ்.ஐ. அல்லது பி.எப்.திட்டத்தில் உறுப்பினர் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சமையல் பணியாளர்கள், நெசவாளர்கள், சாலையோர வியாபாரிகள், சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்தபவர்கள் பங்கேற்கலாம்.
அதேபோல் தையல் தொழிலாளர்கள், பனைமர தொழிலாளர்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பங்கேற்று பதிவு செய்து பயன் பெறலாம்.
அந்த முகாமில் பதிவதற்கு ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுநகரில் சொக்கநாதர்-மீனாட்சி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
- தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
விருதுநகர்
விருதுநகரில் பழமை வாய்ந்த சொக்கநாதர்-மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆவணி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வீதிஉலா வந்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருத்தே ரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தி கோஷம் முழங்க பெண்கள் உள்பட திரளானோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி, இந்து சமய உதவி ஆணையர் வளர்மதி, கோவில் அதிகாரி லட்சுமணன், முன்னாள் தக்கார் ரத்தினகுமார், நிர்வாக அறக்கட்டளை தலைவர் ராம்தாஸ் உள்ளிட்டோர் தேைர வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மேலரதவீதி மெயின் பஜார், தெற்குரத வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் அ.தி.மு.க. செயலாளர் முகமது நயினார், முன்னாள் ஆவின் தலைவர் முகமது எகியா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர்கள் சித்ரகலா, மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி புது மாப்பிள்ளை பரிதாப இறந்தார்.
- திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்
சாத்தூர் அருேக உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 23). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சங்கரேஸ்வரன் புதிதாக மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதில் தனது மனைவியுடன் நடுவக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சங்கரேஸ்வரன் சென்றார்.
நேற்று கணவன்-மனைவி இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். சாத்தூர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரேஸ்வரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஜான்சிராணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜபாளையம் அருகே பண மோசடி செய்ததாக பள்ளி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சோழபுரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயலாளராக ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 24.2.2016 அன்று உடற்கல்வி ஆசிரியராக பானுரேகா என்பவர் பொறுப்பேற்று கொண்டார்.
இவர் மதுரை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். உடற்கல்வி ஆசிரியராக சேர்ந்த பானுரேகாவுக்கும், பள்ளி செயலாளராக பணியாற்றி வரும் ராமருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10.22018 அன்று பானுரேகா தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு தலைமையாசிரியர் வீரலட்சுமி என்பவர் மாவட்ட கல்வி அதிகாரி முத்தையாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மோசடி புகார்
இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா நடத்திய விசாரணையில் கடந்த 24.2.2014 முதல்31.5.2014 வரை பானுரேகா பள்ளியில் பணியாற்றியதாக காட்டி ரூ.51 ஆயிரத்து 500 பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதில் பள்ளி செயலாளர் ராமர், தலைமையாசிரியர் வீரலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பானுரேகா 3 பேரும் சேர்ந்து இந்த பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசில் புகார் கொடுப்பேன் என பெண் மிரட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). இவர் முதல் மனைவியை பிரிந்து சாந்தி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட சாந்தி போலீசில் புகார் செய்யப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தொடரும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலகோபாலபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 59). தேவாலயத்தில் வேலை பார்த்து வந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சம்பவத்தன்று திருடி சென்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று வழிவிடு முருகன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்ேபாது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் தனது மோட்டார் சைக்கிளை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தியிருந்த ேபாது மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடு போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஸ்ரீவில்லிப்புத்தூர் கருப்பையா, கூமாப்பட்டி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் உள்ளஅவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் செய்தித் தொடர்பாளர் கண்ணன்ஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர பொறுப்பாளர் ராமகுரு, வத்திராயிருப்பு ஒன்றிய பொறுப்பாளர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய பொறுப்பாளர்கள் குண்டுமணி என்ற முத்தையா, ராமராஜ், ராஜபாளையம் வடக்கு நகரப் பொறுப்பாளர் முருகதாஸ், மகளிரணி கவிதாசரவணன், ஸ்ரீவில்லிப்புத்தூர் கருப்பையா, கூமாப்பட்டி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.
- சிவகாசியில் வ.உ.சி. பிறந்த நாள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
சிவகாசி
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151- வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடே ஷ், கருப்பசாமி, மா வட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்.
மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலா ளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், திருத்தங்கல் பேரவை ரமணா, ராம ராஜ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் மழையால் சாலை சேதமடைந்து பள்ளமாகி தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
அந்த பாதையில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் செய்தி மாலை மலரில் நேற்று வெளியானது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, பஸ் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தாலோ, விதி முறைகள் மீறினாலோ மாணவர்கள் மீதும், தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வித் துறை மற்றும் காவல் துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
- இந்த கோவிலுக்கு மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
- கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை .
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.






